Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

லிங்கா - பேஸ்புக்கில் கலகலப்பான கமெண்ட்டுகள்...!!

13 டிச, 2014 - 16:57 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாளான நேற்று வெளிவந்த லிங்கா படம் பற்றி சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமா கமெண்ட்டுகள் கடந்த சில தினங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. படம் வெளியான பின் அவையே விமர்சன கமெண்ட்டுகளாக மாறிவிட்டன. “அஞ்சான், கத்தி” படங்களுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகளால் கொண்டாடப்படும் படமாக லிங்கா அமைந்திருக்கிறது. அவற்றில் சில...


* ரஜினி படத்துக்கெல்லாம் விமர்சனமே பண்ணக் கூடாது. அவர் படங்களில் லாஜிக்கே பார்க்கக் கூடாது. நம்மை எண்டர்டெயின் பண்ணுவது ரஜினி படங்களே, எங்கு பார்த்தாலும், கைத்தட்டல்கள், விசில்கள் என கலகலப்பாக போகிறது லிங்கா.


* சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் என்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கம். இப்பவும் ரஜினி படங்களைப் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது.


* அணைக் கட்டும் காட்சிகளும், இரண்டாவது பாதியும் படத்தில் மிகவும் நீளம்... மற்ற ஃபினிஷிங் குமார் படத்தை அழகாகவே ஃபினிஷ் செய்கிறார்.


* இனிமே, எவனாவது அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேப்பீங்க... என்ன ஸ்டைல்மா... சும்மா அதிருது...


* பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய ரஜினிகாந்த்...சிம்ப்ளி சூப்பர்ப்...


* படம் இன்னும் குறைவான நேரத்துல இருந்திருக்கலாம். இப்படி ஒரு முட்டாள்தனமான கிளைமாக்சை பார்க்க முடியாது. ஆனாலும், அவையெல்லாம் ஒரு மேட்டரே இல்லை, ஏன்னா இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம்.


* லிங்கா, வழக்கமான ரஜினிகாந்த் படமல்ல...ரவிக்குமாரும் ரஜினிகாந்தும் மெசேஜுடன் கூடிய படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.


· எல்லா படத்துலயும் சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரி நடிச்சே சொத்து சேத்தவருடா நம்ம தலைவரு...


* சிவப்பாய் அழகாய் இருப்பவர் மட்டுமே கதாநயாகனாக முடியும் என்பதை மாற்றி, கருப்பாய் , ஸ்டைலுடன் நிறம் ஒரு பொருட்டே அல்ல என்று அந்தக் கண்ணாடிக் கூட்டை உடைத்த ரஜினி தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றுமே...


* அனுஷ்கா அழகாக இருக்கிறார், ரஜினியுடன் சில நல்ல காட்சிகள் இருக்கின்றன. சோனாக்ஷி சின்ஹா, நல்லதொரு கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்.


* லிங்கா என்கிற லிங்கேசுவரன், கத்தியில் கத்தி என்கிற கதிரேசன். திருடன், ஜெயில், தண்ணீர், கிராமம், மக்களுக்கு உதவுவது, கிராமத்தை விட்டுப் போவது...என்ன ஒரு ஒற்றுமை...


* என்னுடைய நண்பர்கள் நேற்று என்னுடன் படம் பார்த்தனர், எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அப்படி விமர்சித்தார்கள். ஆனால், இன்று அவர்களுடைய குடும்பத்தினர் பார்ப்பதற்காக என்னிடம் வந்து டிக்கட் கேட்கிறார்கள்.


* எல்லா விமர்சகர்களுக்கும் ரஜினிகாந்த் 2 ஸ்டார் கொடுத்திருக்கிறார்.


* லிங்கா படம் வழக்கமான ரஜினி பட லெவலில் இல்லை, ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு படம் ஏமாற்றம்தான்.


* படம் ரிலீஸூக்கு முன்னாடி, படத்தை பற்றி டிவீட்,பேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்ட ஒரு பயகூட ரிலீஸூக்கு அப்புறம் ஒன்னுமே போடல, அவ்வளவு மொக்கையா?


* முத்து, படையப்பா படத்தை ஒரே ஒரு தடவ டிவிடி-ல போட்டு ரவிக்குமார் சாரும், ரஹ்மான் சாரும் பார்த்திருந்தால் கூட போதும், காப்பாத்திருக்கலாம்.


* படையப்பா, சந்திரமுகி கூட கமர்சியல் படம்தான். நீ ஏதாவது பேசணும்னு பேசாத, தலைவருக்காக நாம அனுபவிக்க வேண்டிய கொடுமை இது.


* என்ன தான் முக்கி முக்கி விமர்சனம் எழுதினாலும் ஊரே தியேட்டர்ல தான் இருக்கும், தலைவரோட ஜாதகம் டிசைன் அப்படி.


* வருத்தமான செய்தி : கூட்டம் குறைந்ததால் கேரளாவில், நிறைய தியேட்டர்களில் லிங்கா படம் தூக்கப்பட்டுவிட்டது.



இது போன்று பல்வேறு விதமான கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். மொத்தத்தில் லிங்கா படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றும், கிளைமாக்ஸ் காட்சி மிகவும் அபத்தமாக இருக்கிறது என்றும், படம் மிகவும் நீளம் என்றும் சொல்கிறார்கள்.


என்னதான் ரஜினி படமாக இருந்தாலும், “சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்” என தொடர்ச்சியாக வெளிவந்த படங்களில் ரஜினியின் படங்களில் உள்ள ரஜினியிஸம் வளர்ந்து கொண்டே வந்தது. எந்திரன் படத்திற்குப் பிறகு அது இன்னும் அதிகமாகியிருக்க வேண்டும்.


ஆனால், இந்த லிங்கா படத்தில் உள்ள ரஜினியிஸம் மீண்டும் முத்து காலத்திற்குச் சென்று விட்டது என்பதுதான் உண்மை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in