மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
டி.வி. தொடர்களில் ஹீரோயினி-வில்லி என இரண்டு வேடங்களில் எந்த வேடம் வேண்டும் என்று என்னைக்கேட்டால் வில்லி வேடத்தைத் தான் டிக் பண்ணுவேன். காரணம், ஹீரோயினிக்கு லிமிட் உண்டு, ஆனால் வில்லிக்கு லிமிட்டே கிடையாது. புகுந்து விளையாடலாம். அதனால்தான் வில்லி வேடத்துக்கே நான் முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் நடிகை நிஷா.
தினமலர் இணையதளத்துக்காக அவரிடம் சில கேள்விகள்...
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து நீங்கள் நடிகையானது ஏன்?
சேனல்களில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தபோது தொகுப்பாளினிதான் எனக்கு சரியாகப்பட்டது. அப்படி நான் நான்கு ஆண்டுகள் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோது, டி.வி. தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதை பார்த்த போதுதான் எனக்கும் சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு, அழகி தொடரில் நடித்தேன். அந்த முதல் தொடரே என்னை பேச வைத்ததோடு, எனக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனால் இப்போது முழுநேர நடிகையாகி விட்டேன். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு தொடர் என்னை பட்டிதொட்டியெல்லாம் பேச வைத்துக்கொண்டிருக்கிறது.
உங்கள் நடிப்புக்கு நேயர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?
நமது நடிப்பை ரொம்பவே வாட்ச் பண்ணுகிறார்கள். முக்கியமாக வில்லி என்கிறபோது கதைக்காக நாம் செய்யும் அடாவடித்தனமான நடிப்பை நிஜமென்று நினைத்து உணர்ச்சிவசபபடுகிறார்கள். எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், நான் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி, ஏன் ப்ரியா இப்படியெல்லாம் பண்றே -என்று என்னை திட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சீரியலை, நிஜ வாழ்க்கை போன்று நேயர்கள் நினைக்கிறார்கள். அதனால் வில்லியாக நடித்ததால் ஒரே சீரியலில் நான் ரீச் ஆகிவிட்டேன்.
டைட்டில் வேடங்களில் நடிக்கும் ஆசை உள்ளதா?
சீரியலைப் பொறுத்தவரை கதாநாயகிதான் பிரச்சினைகளை முறியடிப்பார். ஆனால் அவரை பிரச்சினைகளில் சிக்க வைப்பவர் வில்லியாகத்தான் இருப்பார். அந்த வகையில், எனனைக்கேட்டால் வில்லிதான் கதையையே நகர்த்தி செல்கிறார். அதனால், அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மேலும், கதாநாயகி என்றால் ஒரு லிமிட்டுக்குள்தான் நடிக்க முடியும். ஆனால் வில்லி என்கிறபோது லிமிட்டே கிடையாது. புகுந்து விளையாடலாம். அதனால் வில்லி வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன.
பக்கம் பக்கமாக வசனம் பேசுவதறகு முன்பு டயலாக்கை மனப்பாடம் செய்வீர்களா?
வில்லி வேடம் என்கிறபோது பவர்புல்லான வசனங்கள் இருக்கும். அதேசமயம், நெகட்டிவான ரியாக்சன் அதிகமாக இடம்பெறும். ஆனால் சில காட்சிகளில் நீங்கள் சொல்வது போன்று பக்கம் பக்கமாக வசனம் பேசவேண்டிய சூழலும் ஏற்படும். ஆனால் நான் மலையாளி என்பதால் எனக்கு தமிழ் படிப்பதில் பிரச்சினை உண்டு. அதனால் நான் நடிக்கும்போது ப்ராம்டிங் செய்யச்சொல்லி அதை கேட்டபடி நடித்து விடுகிறேன். அது எனக்கு எளிதாகவும் உள்ளது.
ப்ராம்டிங் முறையில் பேசி நடிக்கும்போது நடிப்பு சிதறாதா?
ப்ராம்டிங் என்பது நாம் ஒரு காட்சியில் நடிக்கிறபோது, நாம் பேச வேண்டிய வசனங்களை இன்னொருவர் சத்தமாக படிப்பார். அதை காதில் வாங்கியபடி பேசி நடிக்க வேண்டும். இது முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் போகப்போக பழகி விடும். இப்போது எத்தனை பெரிய வசன காட்சிகள் என்றாலும், ப்ராம்டிங் முறையில் சிறப்பாக நடித்து விடுகிறேன். மொழிப்பிரச்சினை உள்ள என்னைப் போன்ற நடிகைகளுக்கு அதுவே சிறந்த வழியாகவும் உள்ளது. இதனால் நடிப்பு சிதறுவதற்கு வாய்ப்பில்லை. தேவையான ரியாக்சனை கொடுத்து விட முடியும். அதோடு, ஒரு இரண்டு தடவை மானிட்டரில் ரிகர்சல் பார்த்து விடடுத்தான் டேக் செல்வேன்.
சமீபகாலமாக சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டீர்களே?