ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்லாபூர் பாய்ஸ் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார் சரண்யா மோகன். டாப் ஹீரோயின்களே பாலிவுட்டிற்குள் நுழைய கடுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் நுழைந்திருக்கிறார் இந்த தங்கச்சி பாப்பா...
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தமிழ் சினிமாவில் தங்கச்சி பாப்பாவாக வந்தார். நான்கைந்து படங்களில் தங்கச்சியாக நடித்துவிட்டு வெண்ணிலா கபடி குழுவில் ஹீரோயினாக நடித்தார். தற்போது பட்லாபூர் பாய்ஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...
* பெரிய ஹீரோயின்களே திணறிக் கொண்டிருக்கும் போது எளிதாக பாலிவுட்டுக்கு சென்று விட்டீர்களே..?
பட்லாபூர் பாய்ஸ் வெண்ணிலா கபடி குழுவின் ரீமேக். அந்த படத்திற்கு ஹீரோயின்கள் தேடிக் கொண்டிருக்கும் போது தமிழில் நடித்த சரண்யா மாதிரி ஒரு ஹீரோயின் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சொல்லியிருக்கிறார். அப்போது அவர் மனைவி அப்படீன்னா சரண்யாவையே நடிக்க வைக்கலாமே என்று கூறியிருக்கிறார். இப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. தேங்ஸ் மேடத்துக்கு. வெண்ணிலா கபடி குழுவில் நடிச்ச கேரக்டர்ங்றதால என்னால ஈசியா பண்ண முடிஞ்சுது. தெரிஞ்ச வசனம்ங்றதால இந்தியும் பெரிய பிரச்சினையா இருந்ததில்ல.
* ஆலியாபட்டுக்கு போட்டியா வந்துடுவீங்க போலிருக்கே...?
அய்யோ என்ன சொல்றீங்க...(பதறுகிறார்) அவுங்க எங்க நான் எங்க. இது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்துல கிடைச்ச சான்ஸ் அவ்ளோதான். அவுங்க மாதிரில்லாம் என்னால எந்த காலத்துலேயும் நடிக்க முடியாது. (முத்தக்காட்சியை சொல்கிறார்) நானெல்லாம் இந்த நெக்ஸ்ட் டோர் கேர்ள், கிராமத்து பொண்ணு. இந்த ரேன்ஞ்சுதான். தொடர்ந்து பாலிவுட்ல நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு நான் நம்பல, அதை எதிர்பார்க்கவும் இல்லை. நமக்கு சவுத் தான் பெஸ்ட். அதுல நல்ல சான்ஸ் கிடைச்சாலே போதும்.
* இந்தி பட அனுபவம் எப்படி?
கூட நடிச்ச எல்லோரும் நல்ல பிரண்ட்லியா பழகினாங்க. கேரளா பத்தி நிறைய கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க. படத்துல நான் டெல்லி பொண்ணா நடிச்சேன். அதனால டெல்லி பற்றி நிறைய கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ராஜஸ்தான் பக்கம் சூட்டிங் நடந்தப்பதான் வெயில் தாங்க முடியாம கொஞ்சம் சிரமப்பட்டேன்.
* தங்கை கேரக்டர்லேருந்து ஹீரோயினா ஆகுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டீங்க போல...
அது உண்மைதான். என்னை தங்கையாவே பார்த்தவங்க ஒரு காதலியா, ஹீரோயினா பார்க்க தயங்கினாங்க. அப்புறம் தங்கையாக நடிக்கிறத குறைச்சிக்கிட்டு ஒரு சின்ன கேப் விட்டு அப்புறந்தான் ஹீரோயினாக நடிக்க ஆரம்பிச்சேன்.
* எந்த படத்துலேயும் கவர்ச்சியா நடிச்சதில்லையே...?
கிளாமருக்கும் நமக்கும் சுத்தமா ஆகாது. என்னோட முகமும், உடல்வாகும் ரொம்பவே சாப்ட். நான் கிளாமரா நடிச்சா அது காமெடியாத் தான் இருக்கும்.
* தமிழில் நடிப்பதை குறைச்சிட்டீங்களே...?
நான் ஏன் குறைக்கிறேன். வாய்ப்புகள் அதிகமாக தமிழில் வரவில்லை. அதனால் மலையாள படங்களில் நடிக்கிறேன். தற்போது சுயம் என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
* டான்ஸ் ஸ்கூல் நடத்துறீங்களாமே?
அப்பாதான் நடத்துறாங்க. எனக்கு நேரம் கிடைக்கும்போது அங்கு சென்று நானும் கற்றுக் கொள்வேன். நான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவேன். நடிப்பதை விட அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்.
* அடுத்து இந்திப் பட வாய்ப்பு கிடைச்சா நடிப்பீங்களா?
இந்தி படத்துல வாய்ப்பு கிடைக்குதுங்றதுக்காக நடிக்க மாட்டேன். அந்த கேரக்டர் எனக்கு சூட் ஆகுமா? என்னால நடிக்க முடியுமான்னு பார்த்து நடிப்பேன்.
* சினிமால நீங்க எதிர்பார்த்து வந்ததெல்லாம் நடந்துடுச்சா?
எதிர்பாராததும் நடந்திருக்கு. பேசிக்கா நான் ஒரு டான்சர். நடிகையாவேன்னு நினைக்கவே இல்லை. டான்சுல பெரிய லெவலுக்கு போகணுங்குறது தான் என்னோட ஆசை. அதனால சினிமால எனக்கு கிடைச்சது எல்லாமே நான் எதிர்பாராம கிடைச்சதுதான்.
* உங்களோட ட்ரீம் கேரக்டர் என்ன?
சங்கராபரணம், சலங்கைஒலி மாதிரி ஒரு மியூசிக்கல் டான்ஸ் படத்துல நடிக்கணும். என்னோட டான்ஸ் திறமை முழுக்க அதுல காட்டணும். அந்த வாய்ப்பு வரும்னு நம்புறேன்.
* தங்கை நடிக்க வருவதா இருந்தாங்களே...?
அவள் என்னை விட பெரிய டான்ஸ் பைத்தியம். அவளுக்கு டான்சும், எங்க டான்ஸ் பள்ளியும்தான் எல்லாமே அதை விட்டுவிட்டு சினிமாவுக்கு வருவான்னு எனக்குத் தோணல.