Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கமல் 60 - பிரபலங்களின் வாழ்த்தும்; கருத்தும்...!!

07 நவ, 2014 - 14:16 IST
எழுத்தின் அளவு:

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே... என அப்பாவி சிறுவனாய் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான கமல், அதன்பின்னர் காதல் இளவரசனாய், நாயகனாய், சகலகலா வல்லவனாய், மகாராசானாய், உலகநாயகனாய் உயர்ந்து இன்று தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்து, திரைவானில் நட்சத்திரமாய் ஜொலித்து கொண்டு இருக்கும் கமல்ஹாசனுக்கு இன்று 60வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் அவருடன் பணியாற்றிய திரைநட்சத்திரங்களும், இன்றைய இளம் தலைமுறை நடிகர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...


பிரதாப் போத்தன்


60வயது ஆனாலும் இப்ப வரைக்கும் அவருக்கு 60 வயது என்று சொல்ல முடியாது. அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் எங்க அண்ணன் கூட கமல் நடித்தார். நான் சினிமா பீல்டுக்கு வந்த 4வது படம் வறுமையின் நிறம் சிகப்பு. அந்தப்படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தோம். என் ரோல் மாடல் கமல் சார். அவரது ரசிகராக அவரது படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டேன், சினிமாவில் அவர் மர்மயோகி மட்டுமல்ல, கர்மயோகி கூட. சொத்து, கார் பங்களா எல்லாம் சேர்க்க தெரியாது அவரது உயிர் மூச்சு சினிமா தான். அவர் சாதித்ததை பாதி கூட யாராலும் சாதிக்க முடியாது. அவரால் இந்தியாவுக்ககே பெருமை.


நடிகை அம்பிகா


நானும் ஒரு தொழிலாளி படத்தில் தான் முதன்முதலில் கமலோடு நடித்தேன். ஆனால் முதலில் வெளிவந்த படம் சகலகலா வல்லவன். ஹீரோயின்களின் ஹீரோ கமல். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நடிகை ராதா


கமல் சாரோடு நடித்த காதல் பரிசு படம் இன்னும் என் மனதில் இருக்கிறது. தமிழகத்தின் அபிமான நடிகர் அவர், நாங்கள் வந்த புதிதில் பரபரப்பாக பேசப்பட்டவர், ஆனாலும் அக்காவுடனும், என்னுடனும் ரொம்ப இயல்பாக பழகினார். எங்கள் குடும்பத்தின் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நடிகை சுகன்யா


கமல் சாருடன் மகாநதி, இந்தியன் என இரண்டு படங்கள் நடித்தேன். நல்ல அனுபவம், அவர் மிக சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார்.


நட்டி என்ற நட்ராஜ் - நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர்


தமிழ் சினிமாவை உலக அரங்கில் அரங்கேற்ற முயற்சித்த முதல் பாகிதரனே, 60-ம் இளமை தான் என்று உலகுக்கு உணர்த்தும் என்றும் இளமையான எங்கள் சகலகலா


வல்லவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பெருமை சேர்க்க வேண்டும்.


நடிகை த்ரிஷா


கமல் சாருடன் இரண்டு படங்களில் நடிக்க பேசப்பட்டு வாய்ப்பு மிஸ்ஸாகிவிட்டது. அது தசாவதாரம் மற்றும் மர்மயோகி. நான் அவருடன் நடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். என்னை கூப்பிட்டு சொன்னார், த்ரிஷா வருத்தப்படாதீங்க, கண்டிப்பாக நாம் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்போம் என்றார். அவர் சொன்னபடி மன்மதன் அம்பு படத்தில் நடிக்க வைத்தார். எனக்கு தமிழ் தெரியும் இருந்தாலும் அந்தப்படத்தில் எனக்கு டீச்சர் போல் சொல்லிக்கொடுத்தார், கவிதை பேச வைத்தார், சொந்த குரலில் பேசினேன. அந்தப்படத்தில் அவருடன் நடித்தபோது நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு நடிகையும் கட்டாயம், கமல் சாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். கமல் சார், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.


சிவா - சென்னை 28


ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இளமையாகி வருபவர் நம் கமல் சார் மட்டும் தான். ஒருமுறை அவர் சொன்னார் நான் பறவை மாதிரி பறந்து கொண்டே இருப்பேன் என்று... அதுமாதிரி அவர் பறந்து கொண்டே இருக்கிறார். சென்னை 28 படத்தின் வெற்றியின் போது அவர் கையில் விருது வாங்கினேன். அப்போது அவர் சொன்னது, வெற்றியை மனதிலேயே வைத்து கொண்டே இருக்காமல் அடுத்த வேலையை பாருங்கள் என்றார், அது இன்னுமும் என் மனதில் இருக்கு. எங்கள மாதிரி ஆட்களுக்கு கொஞ்சம் டைம் ஒதுக்குங்கள், அவ்வப்போது உங்களை சந்திக்க ஆசைப்படுகிறோம். வீ லவ் கிம். ஹேப்பி பர்த்டே கமல் சார்.


நடிகை ரம்பா


சிங்கீதம் சீனிவாசன் சார் இயக்கத்தில், காதலா காதலா படத்தில் நடித்தேன். கூடவே பிரபுதேவா, செளந்தர்யா இருந்தாங்க. படத்தின் சீன்களை இயக்குநர் சொல்லிவிடுவார், அதை இன்னும் மெருகேற்றுபவர் கமல் சார். அவர் கூட ஒரு படம் நடித்தாலும் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. மிகப்பெரிய டெக்னீசியன், கலைஞன் கூட வேலை பார்த்தது சந்தோஷத்தையும், மன நிறைவையும் தருகிறது. ஹேப்பி பர்த் டே கமல் சார்.


நடிகை நந்திதா


கமல் சாரை எப்ப பார்த்தாலும் ஒரு பிரஸ் லுக், எனர்ஜி இருக்கும். எல்லோருக்கும் பிடித்தமான நடிகர் அவர். ஒரு ரசிகையாக இன்னும் பல படங்கள் அவர் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார்.


ஸ்டூடியோ கிரீன் பிரபு


யார் சினிமாவுக்குள் வந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் கமல் சார், மிக பெரிய இன்ஸ்பரேஷனாக இருப்பார். ஒவ்வொரு புதிய முற்சிக்கும் அவர் தான் அறிமுகம், அவர்


வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெருமையாக இருக்கு. மகா கலைஞனுக்கு பிறந்தநாள் வாழுத்துக்கள்.


நடிகை வேதிகா


எல்லா நடிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். மூன்றாம் பிறை படம் என் பேவரைட். எல்லா நடிகர்களும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. தமிழ் சினிமாவுக்கு கமல் சார் கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை.


இயக்குநர் எழில்


திருவாரூரில் 10வது படிக்கும்போது என்னோட நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து தியேட்டரில் ஒரு அதகளம் பண்ணி ஆடி-பாடி பார்த்த படம் சலங்கை ஒலி. அந்தப்படம் பார்த்த 2வது நாள் நானும், எனது நண்பர்களும் பரதம் கற்று கொண்டோம். அந்தளவுக்கு நான் உண்மையான ரசிகன். அவரது படங்களை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அவர் இருக்கும் சினிமா பீல்டில் நான் இருப்பது பெருமை. வாழ்த்துக்கள் சார்!


நடிகை அனன்யா


அவரது நிறைய படங்கள் பார்த்துள்ளேன். அதில் ஒரு ஒர்ஜினாலிட்டி இருக்கும். அவர் நடித்த குணா படம் நான் பார்த்திருக்கேன். மலையாளத்தில் சிக்கார் என்ற படத்தில் மோகன்லால் கூட நடித்தேன். அந்தபடத்தின் ஷூட்டிங் ஒரு குகையில் நடந்தது. அப்போது தான் இது குணா படத்தில் கமல் சார் நடித்த இடம் என்று சொன்னாங்க. அப்படி ஒரு சந்தோஷம் இருந்தது. நாயகன், ஹேராம், எல்லாம் எனது பேவரைட் படம். ஹேராமில் வரும் மராத்தி பாடலை அடிக்கடி நான் பாடுவேன்.




நடிகை ஹன்சிகா


அவர் நடித்த இந்தி படங்களை ஒன்று விடமால் பார்த்துள்ளேன். ஏக் துஜே கே லியே எனது பேவரைட். கமல் சாரை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. கமல் சாரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது அதனால் தான் ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார். இவரது படங்கள் அடுத்த வர எங்கள மாதிரி தலைமுறையினருக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.




இயக்குநர் நலன் குமரசாமி


எனக்கு சின்ன வயதில் இருந்தே மாபியா தொடர்பான கதைகள் ரொம்ப பிடிக்கும். கமல் சார் நடித்த நாயகன் படத்தை பல முறை பார்த்துள்ளேன். ஒருவேளை நான் நாயகன் தொடர்பான படங்களை பார்த்ததால் என்னவோ, இப்போது அதுமாதிரி படங்களை எடுக்க தோன்றுகிறது. நாயகன் படம் எல்லோரையும் அழ வைத்த படம். நாயகன் படத்தின் இன்ஸ்பரேசன் தான் நான் இயக்கிய சூது கவ்வும் படம். சூதுகவ்வும் படத்தை கமல் சாரே பார்க்கணும் சொன்னாரு, பார்த்துவிட்டு, படத்தின் அளவை குறைக்க சொன்னார். அவர் சொன்னது உண்மையான, நேர்மையான விமர்சனமாக இருந்தது. அவரது அறிவுரையை ஏற்று இப்போது எனது அடுத்த படத்தை இயக்குகிறேன். தமிழ் சினிமாவின் லெஜெண்ட் கமல் சார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இவர்கள் தவிர சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு, அருள்நிதி, ஹன்சிகா, விக்ரம்பிரபு, ஸ்ருதி, தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in