Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஆக்டர் ஆகும் டாக்டர்கள்...! ஸ்பெஷல் ஸ்டோரி!!

16 ஜூலை, 2014 - 15:06 IST
எழுத்தின் அளவு:

டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இளைஞனின் குழந்தைப் பருவகால கனவு. ஆனால் காலப்போக்கில் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் சிதைந்து போகிறது. லட்சத்தில் ஒருவருக்கே தாங்கள் கண்ட கனவுப்படி டாக்டர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களாலும், 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை பணம் இருப்பவர்களால் மட்டுமே டாக்டராக முடியும் என்பது நிகழ்கால நிலை.


மக்கள், கடவுளுக்கு நிகராக பார்ப்பது டாக்டர்களைத்தான். எந்த ஒரு பெண்ணையும் அவளது கணவனுக்கு அடுத்தபடியாக தொடும் உரிமையை இந்த சமூகம் கொடுத்திருப்பதும் டாக்டருக்குத்தான். அப்படிப்பட்ட புனிதமான நிலையில் இருக்கும் டாக்டர்களுக்கு நடிகராகும் கனவும், ஆசையும் இருப்பதுதான் காலக்கொடுமை.


தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலும் டாக்டர்கள் சினிமாவில் நடித்து வந்திருக்கிறார்கள். நடிப்பு என்பது அவர்களுக்கு தங்கள் தொழில் நேரம் போக மீதி நேரத்தில் பொழுபோக்கிற்காக, ஒரு மாறுதலுக்காக செய்து வந்தார்கள். ஆனால் இப்போது டாக்டர்கள் முழு நேர நடிகராகி வருகிறார்கள்.


ராஜசேகர்


டாக்டர் ராஜசேகர்தான் முதன் முறையாக ஹீரோவான டாக்டர். ஆக்டரான பிறகு அவர் கிளினிக் எதுவும் நடத்தியதாக தெரியவில்லை ஆனால் எப்போது கேட்டாலும் மருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாக சொல்வார்.


அஜ்மல்


அஞ்சாதே, திரு திரு துறு துறு, கோ, கருப்பம்பட்டி, சமீபத்தில் வெளிவந்த வெற்றிச் செல்வன் படங்களில் நடித்த அஜ்மல் ஒரு டாக்டர். உக்ரைன் நாட்டில் டாக்டருக்கு படித்து விட்டு கோடம்பாக்கத்தில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.


சேது


ஸ்டான்லி மருத்துவமனையில் ஸ்கின் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் சேது பெரிய இடத்து இளைஞர். வசதிக்கும் குறைவு இல்லை. ஆனாலும் அவருக்கு சினிமா ஆசை. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மீண்டும் ஆஸ்பத்திரிக்கே சென்று விட்டார். இப்போது வாலிப ராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் வெற்றி அடைந்து சேது பிசியான நடிகராகிவிட்டால் ஸ்டான்லி மருத்துவனைக்கு டாட்டா சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டிக்கு வெல்கம் சொல்லி விடுவார்.


பரத் ரெட்டி


உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதிரடிப்படை அதிகாரியாக வந்த பரத் ரெட்டி, இப்போது தெலுங்கில் பிசியான வில்லன் நடிகர், தமிழில் ரகளபுரம் படத்தில் நடித்தார். கடைசியாக இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மச்சானாக நடித்தார். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் புகழ்பெற்ற நரம்பியில் நிபுணர். ஒரு ஆபரேஷனுக்கு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குகிற பிசியான டாக்டர்.


சரவணன்


மதுரையில் பிரபலமான டாக்டர் சரவணன். ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவைகளை செய்து வருகிறவர். அவருக்கும் நடிப்பு ஆசை காட்டி அவரையே தயாரிப்பாளராக்கி அகிலன் என்ற படத்தை எடுத்தார்கள். இப்போது டாக்டர் சில படங்களில் நடித்து வருகிறார்.


ராமு


திருச்சியை சேர்ந்த பிரபல ஈ அண்ட் டி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராமுவிற்கும் நடிப்பு ஆசை வந்து பிரம்மதேவா என்ற படத்தை தயாரித்து, நடித்தார். அதற்கு முன்பும் சில படங்களில் நடித்திருந்தார். பிரம்மதேவா சரியாக போகாததால் மீண்டும் டாக்டர் பணியை தொடர்கிறார். நல்ல வாய்ப்பு அமைந்தால் மீண்டும் ஆக்டர் ஆவார்.


பவர்ஸ்டார் சீனிவாசன்




இவர்களுக்கிடையில் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன் பவர் ஸ்டார் என்ற பெயரில் காமெடி ஆக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பெறாத பலர் தாங்கள் டாக்டர் என்பதை மறைத்து நடித்துக் கொண்டிருக்கலாம். இன்னும் பல டாக்டர்களுக்கு நடிப்பு ஆசை இருக்கலாம். மருத்துவ துறையில் கோடிக் கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கும் டாக்டர்களை நடிகராக்கவும், தயாரிப்பாளராக்கவும் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.


ஒருவருக்கு நடிகர் ஆகும் ஆசை இருந்தால் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். விஷ்காம் எடுத்து படிக்கலாம். கூத்துப்பட்டறையில் சேரலாம். நாடகம் நடத்தலாம். பிறகு ஏன் டாக்டருக்கு படிக்க வேண்டும். நடிகர் ஆகும் ஆசை இருப்பவர்கள் வழிவிட்டு ஒதுங்கினால் அந்த வாய்ப்பு டாக்டர் கனவுடன் இருக்கும் இன்னொரு இளைஞருக்கு கிடைக்குமே. ஒரு தொழிலில் இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்யக்கூடாதா, செய்வதில்லையா என்று கேட்கலாம். டாக்டர் என்பது ஒரு தொழில் இல்லை. அது ஒரு சேவை, அர்பணிப்பு, தியாகம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in