ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |
சினிமாவில் நடிகை என்ற அடையாளத்துடன் பயணித்தபோது இருக்கிற இடமே தெரியாமல் இருந்தவர் ரம்யா நம்பீசன். ஆனால், பாண்டியநாடு படத்தில் பை பை பை கலாய்ச்சி பை என்ற ஹிட் பாடலை பாடிய பிறகு பாப்புலரான பிகராகி விட்டார். இப்போது காலேஜ் பசங்களெல்லாம் ரம்யா மாதிரியான பொண்ணுங்களைப்பாத்து இந்த பாட்டை பாடி கலாய்க்கிற அளவுக்கு எங்கும் ரம்யா மயமாகி விட்டது. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ...
* திடீரென்று பின்னணி பாடகியாக உருவெடுத்தது எப்படி?
இது திடீரென்று எடுத்த முடிவல்ல. சினிமாத்துறைக்குள் வருவதற்கு முன்பே நான் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியமெல்லாம் முறைப்படி பயின்றேன்.. அந்த அளவுக்கு எனக்கு பாட்டு, நடனம் மீது ரொம்ப ஆசை. மேலும், பள்ளியில் நடந்த பல நிகழ்ச்சிகள்ல பரத நாட்டியமாடி பரிசு வாங்கியிருககேன். சில பக்தி ஆல்பத்திலயும் பாடியிருக்கிறேன். அதேபோல் சில மலையாள படங்களிலும் பாடினேன். அதனால் நான் திடீரென்று பாட வரவில்லை. நடிக்க வர்றதுக்கு முன்னாடியே பாடகி ஆகிவிட்டேன்.
* பை பை பை பாடல் ஹிட் பற்றி?
தமிழ் படங்களில் நடித்து பேசப்பட்டதை விட இந்த ஒரு பாடல் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து விட்டது. ஒரு பல படங்களில் நடித்தும் என்னை தெரியாமல இருந்த ரசிகர்கள் இந்த பாடல் மூலம்தான் ரம்யா நம்பீசன் என்றொரு நடிகை இருப்பதை அறிந்திருப்பதாக சிலர் சொன்னார்கள். ரொம்ப பெருமையாக இருந்தது. அந்த வகையில், இப்படியொரு நல்ல பாடலை என்னை பாட வைத்த இசைமைப்பாளர் டி.இமானுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
* உங்களுக்காக எந்த படத்திலாவது பின்னணி பாடியிருக்கிறீர்களா?
வைபவுடன் நடித்துள்ள டமால் டுமீல் படத்தில் ஒரு பாடலை எனக்காக பாடியிருக்கிறேன். நான் பாடிய பாடலுக்கு நடித்தபோது, இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். அதோடு இனிமையான அனுபவமாகவும் இருந்தது. அதனால், இதேமாதிரி இனி நான் நடிக்கிற படங்களில் எனக்கு நானே பாட வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது.
* பீட்சா படத்தில் ஹிட் ஆனபோதும, தமிழில் அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
2000 வருசத்திலேயே சயனம் என்ற மலையாள படத்தில் நான் அறிமுகமானேன். அதையடுத்து தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தேன். தமிழிலும், ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்தேன். ஆனால், படங்களின் தோல்வி என்னை பேச வைக்கவில்லை. பீட்சா வெற்றி பெற்றதால் வெளிச்சத்துக்கு வந்தேன். ஆனால், மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வருவதால், பீட்சாவுக்கு பிறகு பல படங்கள் கிடைத்தும் உடனடியாக என்னால் கால்சீட் கொடுக்க முடியாமல் தவிர்த்தேன்.
* நீங்கள் கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
கிளாமர் காட்சியில் மாடர்ன் உடையணிந்து நடித்திருக்கிறேன். ஆனால், சிலரைப்போன்று டூ-பீஸ் ரேஞ்சுக்கெல்லாம் இறங்கி நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதனால்தான் ஒரு லிமிட்டோடு நிற்கிறேன். அதேசமயம், கிளாமர் உணர்ச்சிகளை முகபாவணையில் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், ஹீரோக்களுடன் நெருக்கமாகவும் நடித்திருக்கிறேன். அதனால்தான் பீட்சா படத்தில் எனக்கும் விஜயசேதுபதிக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருந்தது.
* இருப்பினும் அதன்பிறகு விஜயசேதுபதியுடன் நடிக்கவில்லையே?
ஒரு படம் ஹிட்டானால் அதே நடிகர்-நடிகைகள் அடுத்தடுத்து நடிப்பது சகஜம்தான். ஆனால் என்ன காரணமோ அவருடன் அடுத்து நடிக்க படங்கள் கிடைக்கவில்லை. ஆனால், விமலுடன் ரெண்டாவது படம், வைபவுடன் டமால் டுமீல், அருள்நிதியுடன் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ஆகிய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறேன்.
* ரெண்டாவது படம் என்ற படத்தில் நடித்தபோது உங்களுக்கும், இனியாவுக்குமிடையே ஈகோ போர் வெடித்ததாமே?
நான் நடிக்கிற படங்களில் எத்தனை கதாநாயகி இருந்தாலும் நான் கவலைப்பட்டதில்லை. எனக்குரிய கேரக்டர் பிடித்தால் நடிப்பேன். அப்படி பல மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். அதேபோல்தான் இந்த படத்தில் இனியாவும் இருக்கிறார் என்றபோது எந்த தயக்கமும் இல்லாமல், குறிப்பாக, போட்டி மனப்பான்மையுடன் அவரைப் பார்க்காமல் நடித்தேன். அதனால், ஈகோ போர் நடந்ததாக கூறப்படுவது உண்மையில்லை. இனியாவும் என்னைப்போன்று மலையாளி என்பதால் படப்பிடிப்பு நடந்தபோது இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். மேலும், ரெண்டாவது படம் படத்தில் நான் விமலுக்கு ஜோடி, இனியா டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, படத்தில் முக்கிய கதாநாயகி நான்தான்.
* தமிழ் சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகளாகியும் கிசுகிசுவில் சிக்காமல் இருக்கிறீர்களே எப்படி?
இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் உடன் நடிக்கும் ஹீரோவுடன் சாதாரணமாக சிரித்து பேசினாலே அவர்களை இணைத்து கிசுகிசு பரவி விடுகிறது. அதேபோல், ஆடியோ விழாக்களிலும் ஜாலியாக பேச முடியவில்லை. அதனால் உடன் நடிக்கிற ஹீரோக்களுடன் ப்ரண்ட்லியாக பழகினாலும், பெரும்பாலும் பப்ளிக்கில் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. இதை ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றி வருவதினால்தான் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத நடிகையாக இருந்து வருகிறேன்.
* முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர நீங்கள் முயற்சி எடுத்ததாக தெரியவில்லையே?
எல்லா ஹீரோக்களுக்கும் பொருத்தமான நடிகைதான் நான். ஆனபோதும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டுமென்றால் குத்தாட்ட நடிகைகள் போன்று பாடல் காட்சிகளில் ஆட வேண்டும். டூ-பீஸ் அணிய வேண்டும். இதுபோன்ற சில தவிர்க்க முடியாத சமாச்சாரங்கள் இருப்பதினால் நான் அந்த மாதிரி படங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், டீசன்டான கதைகள் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் உள்ளது என்கிறார் ரம்யா நம்பீசன்.