Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜாதி அடைமொழியோடு உலாவரும் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

03 நவ, 2013 - 12:44 IST
எழுத்தின் அளவு:

ஜாதி, மதம் இல்லாத இடம் இல்லை. சினிமாவிலும் ஜாதி, மதம் உண்டு. வேறுபாடுகளும் உண்டு. ஆனால் அவைகள் வெளியில் தெரியாமல் கமுக்கமாக இருக்கும். நடிகரோ, இயக்குனரோ தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டுக் கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலான நடிகைகள் தங்கள் ஜாதி அடையாளங்களோடுதான் வலம் வருகிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னால் தான் இந்த ஜாதி, இந்த குலம் என்ற அடையாளத்தை போட்டுக் கொள்கிறார்கள். அதை தங்களின் கவுரவமாக கருதுகிறார்களா? அல்லது பாதுகாப்பாக கருதுகிறார்களா என்று தெரியவில்லை.

குறிப்பாக மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள்தான் நாயர், மேனன் என்ற தங்கள் ஜாதியை பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு வருகிறார்கள். மாஜி ஹீரோயின் ராதா தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டுக்கொண்டதில்லை. ஆனால் தனது மகள்களை சினிமாவில் கார்த்திகா நாயர், துளசி நாயர் என்றே அறிமுகப்படுத்தினார். இவர்கள் தவிர மேகா நாயர், பிரியங்கா நாயர், மாதிரி நிறைய நாயர் நடிகைகள் இருக்கிறார்கள். மேனன் ஜாதி நடிகைகளுக்கும் குறைவில்லை லட்சுமி மேனன், நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ரேணுகா மேனன் உள்பட பலமேனன்கள் இருக்கிறார்கள்.

அப்படியே வடநாட்டு பக்கம் போனால் அவர்கள் ஒன்று ஜாதியை பெயருக்கு பின்னால் போட்டிருப்பார்கள். அல்லது தங்கள் குலத்தின் பெயரை பின்னால் போட்டிருப்பார்கள். அனுஷ்கா ஷெட்டி, சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா ஷெட்டி இப்படி பல ஷெட்டிகள் இருக்கிறார்கள். கீர்த்தி ரெட்டி, சமீரா ரெட்டி, ஸ்ரேயா ரெட்டி, இப்படி நிறைய ரெட்டிகள் இருக்கிறார்கள். மேக்னா நாயுடு, அனுஜா அய்யர், கல்பனா அய்யர்களும் உண்டு.

அகர்வால்களுக்கும், சர்மாக்களுக்கும் கூட பஞ்சமில்லை. காஜல் அகர்வால், நிஷா அகர்வால், சாக்ஷி அகர்வால், கோமல் சர்மா, தீப்தி சர்மா இருக்கிறார்கள். சிங்குகளுக்கும் குறைவில்லை. சாயாசிங், ஷிவானி சிங், சஞ்சனா சிங், விசாகா சிங் என்று நிறைய இருக்கிறார்கள். இவர்கள் தவிர திவ்யா பண்டாரி, ஹன்சிகா மோத்வானி, கமாலினி முகர்ஜி, கீர்த்தி சாவ்லா, பியா பாஜ்பாய், ரீமா சென் இப்படி பல நடிகைகள் தங்கள் குலப் பெயர், ஜாதிப்பெயர் தாங்கி நிற்கிறார்கள்.

ஜாதிப் பெயர் தாங்கி நிற்பது ஒரு பேஷனாகி விட்டது. முதலில் தனி பெயரில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் உடனேயே தன் பெயருக்கு பின்னால் ஜாதியை சேர்த்துக் கொள்கிறார்கள்.

தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதிபெயர் போட்டுக் கொள்வதும், கொள்ளாதுதம் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆனாலும் ஒரு நடிகை என்பவர் பொதுவானவர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரசிக்கப்படுகிறவர், பாராட்டப் படுகிறவர். அவருக்கு எதற்கு ஜாதி அடையாளம் என்பதே சாராசரி ரசிகனின் கேள்வி.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
05 நவ, 2013 - 10:43 Report Abuse
Sirajudeen...M நம் நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் ..... இது நாட்டுக்கு ரெம்ப அவசியம்
Rate this:
pnramesh - Erode,இந்தியா
04 நவ, 2013 - 16:23 Report Abuse
pnramesh முதலில் அரசு ஜாதி வாரியாக வேலைவாய்ப்பை கொடுப்பதை நிறுத்தி கல்வித்தகுதி மற்றும் திறமைக்கு எற்றால் போல் வேலை கொடுக்க வேண்டும்.
Rate this:
m.ravi - madurai,இந்தியா
04 நவ, 2013 - 10:12 Report Abuse
m.ravi சினிமாவிலும் இட ஒதுக்கிடு அரசு அமலாக்க வேண்டும். அப்பொழுது தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Rate this:
appu - Madurai,இந்தியா
04 நவ, 2013 - 08:49 Report Abuse
appu தினமால்ரின்,,,,, சினிமாவிலும் இந்த ஜாதி என்று எடுத்து உரைத்துள்ள விதம் பாராட்ட தக்கது....மேலும் சூப்பர் பஞ்ச் .....
Rate this:
senthil - hamilton,யூ.எஸ்.ஏ
04 நவ, 2013 - 08:31 Report Abuse
senthil நாட்டின் குடியரசு தலைவர் பின்னாடி முகர்ஜி சேர்த்துதான் இருக்கிறது என்பது இங்கு பதிவு செய்ய வேண்டும்
Rate this:
Tholai Nokki - Chennai,இந்தியா
04 நவ, 2013 - 17:40Report Abuse
Tholai Nokki பிரதமர் பெயர் பின்னாலும் இருக்கிறது....
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in