Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பாப்கார்ன் காமெடிக்கு திரும்பும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

03 செப், 2013 - 16:25 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமா அவ்வப்போது ஏதோவது ஒரு டிரண்ட் மாறிக் கொண்டே இருக்கும். புராணப் படங்களிலிருந்து கிராமத்து படங்கள் வரைக்கும் இந்த டிரண்ட் மாறிக் கொண்டிருந்தது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதைத் தொடர்ந்து வரிசையாக அதே மாதிரி படங்கள்தான் ரிலீசாகும். பருத்தி வீரனின் மெகா ஹிட்டுக்கு பிறகு அதே மாதிரி அழுக்கு லுங்கி, செக்டு சட்டை ஹீரோக்கள் நிறைய வந்தார்கள். 2013ம் ஆண்டு காமெடி ஆண்டாக விடிந்தது.

பாப்கார்ன் சிந்தும் அளவுக்கு குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் முழு நீள காமெடி படத்துக்கு பாப்கார்ன் காமெடி படம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த மாதிரி படத்தில் லாஜிக்கோ, கதையோ, மெசேஜோ எதுவும் இருக்காது.  சிரித்துவிட்டு மட்டுமே செல்ல முடியும். இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்ணா லட்டு திண்ண ஆசையா இந்த டிரண்டை ஆரம்பிச்சு வைச்சுது. லட்வின் ஹிட்டு அத்தனை இயக்குனர்களையும் காமெடி பக்கம் யூ டேர்ன் அடிக்க வைத்தது. பத்தாயிரம் கோடி, சுடச்சுட, சந்தமாமா, லொள்ளு தாதா பராக் பராக், ஒன்பதுல குரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாருடா மகேஷ், சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், தீயாவேலை செய்யணும் குமாரு, தில்லுமுல்லு, கலகலப்பு, சொன்னா புரியாது, சும்மா நச்சுனு இருக்கு, தேசிங்கு ராஜா இப்படி இந்த ஆண்டு வரிசையாக இதுவைரக்கும் காமெடி படங்கள் ரிலீசாகியிருக்கிறது. அதிக அளவில் ஹிட்டானதும் காமெடி படங்கள்தான்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. பட்டைய கிளப்பணும் பாண்டியா, மதகஜராஜா, பண்ணையாரும் பத்மினியும், வானவராயன் வல்லவராயன், ரெண்டாவது படம், ஆர்யா சூர்யா, சுட்ட கதை, மொக்க படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கன்னியும் காளையும் செம காதல், தெனாலிராமன், கல்யாண சமையல் சாதம் இப்படி 50 மேற்கும் மேற்பட்ட காமெடி படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. சுமார் 100 படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

இந்த டிரண்ட் எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியாது. ஆனால் இப்போதைக்கு தியேட்டர்காரர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும், மீடியேட்டர்களும் காமெடி படத்தை தேடித்தான் ஓடுகிறார்கள். காமெடியோடு அப்படியே கொஞ்சம் கிளாமர், ஆக்ஷன்னு கலந்து விட்டா ஹிட்டு கன்பார்முன்னு நினைக்கிறாங்க. அதனாலதான் சீரியசா படம் எடுக்குற பாண்டிராஜ், எழில் போன்ற  டைரக்டருங்க கூட காமெடி பக்கம் தாவிக்கிட்டிருக்காங்க.

கடுமையான மனஅழுத்த்தில் இருக்கும் இன்றைய மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு காமெடி படங்கள் வடிகாலாக இருக்காலம். ஆனால் காமெடி படத்தை மட்டுமே ரசிக்கும் தன்மை அத்தனை சிறப்பு வாய்ந்ததல்ல. ஒரு வேளை இந்த டிரண்ட் நீடித்து விடுமானால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, அந்த 7 நாட்கள், மவுன ராகம் போன்ற காலத்தை வென்று நிற்கும் கனமான படங்கள் வராமல் போகும் என்று சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
04 செப், 2013 - 08:36 Report Abuse
raghavan காம நெடி இல்லாமல் காமெடி மட்டும் இருந்தால் வரவேற்க வேண்டியதுதான்.
Rate this:
V.H.SULTHAN - bodinayakanur,இந்தியா
03 செப், 2013 - 22:14 Report Abuse
V.H.SULTHAN சினிமாவில் கமெடி என்பது, என்றும் ராஜாதான். ரொம்ப சீரியசா பண்றேன்னு இவுங்க எதாச்சும் வில்லங்கமா சொல்லிட்டு, பின்னால ஊத்திக்கிச்சுன்னு வருத்தப்பட வேண்டியதில்லை. சுவாரஸ்யமா ஒரு நகர்வு போதும். தென்றல் மாதிரி அது மனதை வருடிவிடும். இளமை அழகு மிகுந்த, நடப்பு உலகத்திற்கு ஏற்ற மாதிரி நகைச்சுவைக் காட்சிகள் இருந்துவிட்டால், பொழுது போவதே தெரிவதில்லை. இன்றைக்கு அதுதானே மக்களுக்கு தேவையான அருமருந்து. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களுக்கான களம் இப்போது இல்லை. இன்று சினிமாவில், சரித்திர காலப் படைப்புகளைக் கூட, நவீனமாகவும், நுட்பமாகவும் சொன்னால் தான் எடுபடும். அன்றைய மக்களின் விழிப்புணர்வு வேறு, இன்றைய மக்களின் விழிப்புணர்வு வேறு. கதைக்களங்கள், கதாபாத்திரங்கள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றை வெகு சிறப்பாக இப்போது சொல்லியாக வேண்டும். இல்லையென்றால், அது பிரமிப்பை ஏற்படுத்தாது. படம் பார்த்து வியக்க வேண்டும். அது மனதில் கவிதையாய், கனவாய் தித்திப்பாய், நினைக்க நினைக்க ஆனந்தமாய், பார்ப்பவர்களை பரவசப்படுத்த வேண்டும். மொத்தத்தில், சம்திங் ஸ்பெசலாக இருந்தால் மட்டுமே இங்கு சினிமாக்காரர்கள் ஜெயிக்க முடியும்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
03 செப், 2013 - 19:03 Report Abuse
Angry ஜெய் யாரும் குடும்பத்துடன் நண்பர்களுடன் உக்காந்து சிரிச்சு பேசுவதில்லை. இக்காலத்தில் அதான் மனம் இந்த மாதிரி காமடி படங்களை விரும்புது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in