தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் |
பேராண்மை படத்தில் அறிமுகமானவர் வர்ஷா. அதன் பிறகு நீர்ப்பறவை படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ, பனிவிழும் மலர்வனம், என்றென்றும் புன்னகை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* பேராண்மை படத்தில் அறிமுகமானவர்களில் நீங்கள் மட்டும் லேட் பிக்-அப் ஏன்?
அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக நான் வாய்ப்பு தேடவில்லை என்று சொல்ல மாட்டேன். நான் நேரடியாக செல்லாவிட்டாலும் எனது மானேஜர் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார். தற்போது நடித்து வரும் படங்கள் வெளிவந்த பிறகு நானும் பிசியான நடிகையாகி விடுவேன்.
* அமைதிப்படை இரண்டாம் பாகத்தில் தந்தை வயதுடைய நடிகர்களுடன் நடிக்கிறீர்களே?
என்னோட கேரக்டர் அப்படி. கதைப்படி ஹீரோவும், மணிவண்ணன் சாரும் பொல்லாத அரசியல்வாதிகள். எங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணமானவர்கள். ஹீரோ என்றால் சண்டைபோட்டு பழிவாங்கி விடுவார். நான் என்ன செய்ய முடியம். என்னிடம் அழகு இருக்கிறது. அதையே ஆயுதமாக வைத்து அவர்களை பழிவாங்குவேன். சீனியர்களுடன் நடிக்கும்போது நல்ல அனுபவங்கள் கிடைக்கிறது.
* "நீர்ப்பறைவை"யில் நீங்கள் ஏமாற்றப்பட்டது உண்மையா?
அந்த பிரச்சினை பற்றி இப்போது பேச வேண்டுமா என்றுதான் யோசிக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன். நீர்ப்பறவையில் சுனேனா நடித்த கேரக்டரில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆடிசனில் செலக்ட்டாகி பாவாடை தாவணி போட்டு போட்டோ ஷூட்டெல்லாம் நடந்துச்சு. சில நாட்கள் கழித்து "அந்த கேரக்டருக்கு சுனேனாவை பிக்ஸ் பண்ணியிருக்கோம். உங்களுக்கு வேற கேரக்டர் இருக்கு. நந்திதாதாசுக்கு காமினேஷனா நடிக்கிறீங்க. நீங்க உயரமா வாட்ட சாட்டமா இருக்கிறதால ஐ.பி.எஸ் அதிகாரி கேரக்டர்தான் பொருத்தமா இருக்கும்"னு சொன்னாங்க. நானும் சரின்னு ஒத்துக்கிட்டேன். படம் வெளிவந்த பிறகுதான் அந்த கேரக்டருக்கு பெருசா முக்கியத்தும் இல்லைன்னு தெரிஞ்சுது. இருந்தாலும் நந்திதாதாஸ்கூட நடிச்சதும், அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டதும் எனக்கு கிடைச்ச பெரிய வாய்ப்பு. அதனால அதை பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்.
* நார்த் இண்டியன் பொண்ணு தெளிவா தமிழ் பேசுறீங்களே எப்படி?
உத்தர பிரதேசம்தான் சொந்த மாநிலம், நான் பொறந்தது கல்கத்தாவுல. 3 வயசுலேருந்து வளர்ந்தது, படிச்சது எல்லாமே தூத்துக்குடியிலதான். எங்க அப்பா மரைன் என்ஜினீயர். தூத்துக்குடி துறைமுகத்துல வேலை. அதனால அங்கேயே செட்டிலாயிட்டோம். தெளிவா தமிழ் பேசுறதாலதான் வாய்ப்பு கிடைக்குறது கஷ்டமா இருக்குன்னு பிரண்ட்சுங்க சொல்றாங்க அது உண்மையா?.
* சோலோ ஹீரோயினா எப்போ நடிக்கப் போறீங்க?
என்றென்றும் புன்னகை படத்துல ஜீவாவும், த்ரிஷாவும்தான் ஹீரோ ஹீரோயின். அதுல இன்னொரு ஜோடியாக வினயும் நானும் நடிக்கிறோம். எங்களுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு. பனிவிழும் மலர்வனம் என்ற படத்தில் சோலோ ஹீரோயினா நடிக்கிறேன். அதுல நான் விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன்லாம் பண்ணியிருக்கேன். பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்கள்ல ஒருத்தியா நடிச்சேன். அப்புறன் ரெண்டு ஹீரோயின்களுடன் நடிச்சிட்டிருக்கேன். கடைசியா சோலோ ஹீரோயினாயிட்டேன். இது நல்ல வளர்ச்சிதானே.
* பெயரை மாற்றி இருக்கீங்களே?
எனக்கு நியூமராலஜில நம்பிக்கை அதிகம். அதனால வர்ஷாங்ற பேரோட அஸ்வதியை சேர்த்துக்கிட்டேன். ஆண்கள்தான் இன்ஷியலை பின்னால போடனுமா நானும் போட்டுக்கிட்டேன். இப்போ என்னோட பெயர் வர்ஷா அஸ்வதி.ஆர்.
* கிளாமரா நடிக்க ரெடின்னு சொல்றீங்களே?
நல்ல அழகு, ஆறடி உயரம், ஜிம்மிலே கிடந்து கட்டுகோப்பா இருக்கேன். அப்புறம் கிளாமரா நடிக்லேன்னா எப்படி? கேரக்டருக்கு ஏற்ற மாதிரி எப்படிப்பட்ட கிளாமரா இருந்தாலும் நான் ரெடி.