ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வனயுத்தம் படத்தில் சந்தன வீரப்பனாக வலம் வந்த நடிகர் கிஷோர் கூட்டம் என்ற பெயரில் உருவாகும் நக்சலைட்டுகள் கதையில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மம்மூத் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் சர்பில் சுமந்த்குமார் ரெட்டி தயாரிக்கும் படம் கூட்டம். நவீன் சந்திரா, பியா, நாசர், சாய்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சுதாகர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.
படத்தின் டைரக்டர் எம்.ஆர்.ஜீவன் கூறுகையில், ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகள், தங்கள் தவறுகளை உணர்ந்து சரணடைகின்றனர். ஆனால், பணம், பதவி பலம் உள்ளவர்களுக்கு அடியாட்களாக மாற வேண்டிய சூழ்நிலை. திருந்தி வாழ நினைக்கும் நக்சலைட்டுகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், எப்படி களையப்படுகின்றன என்பது கதை. அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது, என்றார்.