Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எனக்கே விருது கிடைத்த உணர்வு! லைப் ஆப் பையின் சவுண்ட் டிசைனர் சாய் ஸ்ரவணம் பேட்டி!

27 பிப், 2013 - 11:06 IST
எழுத்தின் அளவு:

சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாகவும், தனக்கே விருது கிடைத்த ஒரு உணர்வு இருப்பதாகவும் சென்னையைச் சேர்ந்த சவுண்டு டிசைனர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ‘லைப் ஆப் பை’ என்ற படம் சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசைஅமைப்பாளர், சிறந்த விஷூவல் எபக்ட் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்று உலகில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னையை சேர்ந்த சவுண்ட் டிசைனர் :
புதுவை, மூணாறு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படம் இந்தியாவின் கதைக்களத்தை கொண்டதாகும். கடல் பயணத்தின் போது புயலால் உடைந்து போன படகில் ஒரு புலியுடன் 200 நாட்கள் பயணப்படும் இளைஞனின் கதையே ‘லைப் ஆப் பை’யாகும். விருதுகளைப் பெற்றவர்களுக்கு இணையான மகிழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த சவுண்டு டிசைனர் சாய் ஸ்வரணம் பெற்றுள்ளார்.

சென்னை பாலவிகாஷ் பள்ளியின் முன்னாள் மாணவரான சாய் ஸ்வரணம் முதுநிலை கம்ப்யூட்டர் படிப்பு முடித்துவிட்டு, ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணியாற்றிவந்தார். சத்ய சாய்பாபா பக்தரான இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாய்பஜனில் கலந்து கொண்டு தபேலா வாசிப்பார். இதுதான் இவருக்குள்ள இசைத்தொடர்பு. இந்த நிலையில் ஒரு நாள் சத்ய சாய்பாபா இவரை இசை தொடர்பான பணியில் ஈடுபடுமாறு கூறியதை அடுத்து தான்பார்த்த வேலையை விட்டுவிட்டு, சென்னை அடையார் பரமேஸ்வரி நகரில் உள்ள தனது வீட்டு மாடியிலேயே ஸ்டூடியோ அமைத்தார். சத்யசாய்பாபாவே நேரில் வந்து ஸ்டூடியோவை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். சவுண்டு என்ஜினியரிங் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீக்கமற கற்றுத்தேர்ந்தார்.

ஆறாயிரம் பாடல்கள் பதிவு : சவுன்டு என்ஜினியர் என்பதோடு இசைஞானமும் உடையவர் இவர் ஒருவரே என்பதால் இவரது ஒளிப்பதிவு முறை பல முன்னனி பாடகர்களால் பாராட்டப்பட்டது. நாளடைவில் சவுண்டு டிசைனரானார். இவரிடம் பாடகர் வந்தால் போதும் இவரே இசை அமைப்பாளர் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து விடுவதால் குறுகிய காலத்தில் 680 ஆல்பங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். இவரது ஸ்டுடியோவில் இதுவரை ஆறாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, ராஜ்குமார் பாரதி, காரைக்குடி மணிஅய்யர் உள்ளிட்ட அனைத்து முன்னணி பாடகர்களும் இவரது ஸ்டூடியோவில் வந்து பாடிவருகின்றனர்.

லைப் ஆப் பை வாய்ப்பு : இந்த நிலையில் தான் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் மூலம் ‘லைப் ஆப் பை’ படத்திற்கான இந்திய இசை சேர்க்கும் பணி கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு இசை கேட்கிறார்கள் என்று தான் நினைத்தேன், பிறகுதான் உலகப்புகழ் பெற்ற பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் என்பதும், கேட்பவர் ஆலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் மைக்கேல் டானா என்பதும் தெரியவந்தது. இந்தியா முழுவதும் பல ஆண்டு அனுபவம் பெற்ற பல்வேறு சவுண்டு என்ஜீனியர்கள் இருந்த போதும் 32 வயதே ஆன ,ஆறு ஆண்டு அனுபவமே கொண்ட தன்னை தேர்வு செய்துள்ளார்கள் என்றால் அதற்கு சத்யசாய்பாபாவின் அருளால்தான் என்பதாக எடுத்துக்கொண்டு எப்படியும் இதில் எனது திறமையை காட்டிட வேண்டும் என்று இரவு, பகலாக பணியாற்றினேன்.

விலை உயர்ந்த சாப்ட்வேரை வாங்கி தந்த படக்குழு : வெளிநாட்டில் உள்ளவர்களோடு முகம் பார்த்து பேசுவதற்கு ‘ஸகைப்’ தொழில்நுட்பம் கைகொடுப்பது அனைவருக்கும் தெரியும், அதிலேயே மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம்தான் ‘சோர்ஸ் கனெக்ட் சாப்ட்வேர்’.இதன் மூலம் இரு பக்கத்திலும் இருப்பவர்கள்(அமெரிக்கா-இந்தியா) இசைக்கருவிகளையும், இசையையும் மிக துல்லியமாக கட்டுப்படுத்த முடியும் .,ஆனால் மிகவும் விலை உயர்ந்த இந்த சாப்ட்வேர் என்னிடம் இல்லை அதை வாங்கும் சக்தியும் இல்லை என்று கூறினேன். அவர்கள் நினைத்தால் அப்படியா என்று கேட்டுவிட்டு வேறு சவுண்டு டிசைனரிடம் போய் இருக்கலாம் ஆனால் என் திறமை மீது நம்பிக்கை வைத்து பரவாயில்லை என்று அவர்களே அவர்களது செலவில் அந்த சாப்ட்வேரை வாங்கித்தந்தார்கள்.

பட டைட்டிலால் பெரிய கவுரவம் : திறமையை மதிப்பது மட்டுமில்லை, தான் எதிர்பார்ப்பது வருவதற்காக எவ்வளவு செலவும் செய்வார்கள், எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது நிருபணமானது. படத்தின் இசை அமைப்பாளர் மைக்கேல் டானா தொடர்ந்து பலவிதங்களில் என்னிடம் பலவிதத்தில் இசையை கேட்டு கேட்டு வாங்கினார். இதற்காக இங்கே ஒரு அணியே வேலை செய்தது. படம் வந்தபோது எங்களது இசையை படம் முழுவதும் வருவது போல பாராட்டும்படி பயன்படுத்தி இருந்தார். அது மட்டுமல்ல பட டைட்டிலில் உங்களது பெயரை எப்படி போடவேண்டும் என்று கேட்டு நான் கேட்டுக்கொண்டபடியே சவுண்டு டிசைனர் சாய் ஸ்ரவணம், ரீசவுண்டு இந்தியா என்று போட்டு பெரிய கவுரவம் கொடுத்தனர்.

எனக்கே விருது கிடைத்த உணர்வு : படம் வெளிவந்து உலகம் முழுவதும் ஓடியபோதுதான் தெரிந்தது படத்தின் பிரம்மாண்டம், அதன்பிறகு பல, பல விருதுகள்., இப்போது ஆஸ்கார் விருதும் கிடைத்துள்ளது. இசை அமைப்பாளர் விருது பெற்ற மைக்கேல் டானாவிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தேன், அவர் பதிலுக்கு நன்றி! இது ஒரு கூட்டு முயற்சி, இந்த முயற்சியில் உங்களது பணியும் முக்கியமாக இருந்தது, பாராட்டுக்கள் என்று பதில் அனுப்பியிருந்தார்,எனக்கே விருது கிடைத்தது போல இருந்தது எல்லாம் சத்ய சாய்பாபாவின் அருள் என்று சொல்லி முடித்தார் சாய் ஸ்ரவணம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in