ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்டு படத்துக்கு பிறகு "கண்ணா நடிக்க ஆசையா?" என்று கேட்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வாய்ப்புகள் குவிகிறது. கிடைக்கிற வாய்ப்பபை எல்லாம் ஒத்துக்கொண்டு இரவு பகல் பாராமல் நடித்துக் கொண்டிருக்கிறார். "ஒன்பதுல குரு" படத்தில் ஒரே ஒரு குத்துப்பாட்டுக்கு விஜயா கார்டனில் ரிச் கேர்ள்ளோடு ஆட்டம்போட்டுக் கொண்டிருந்தவரை அர்த்த ராத்திரியில் அமுக்கி பிடித்து எடுத்த சிறப்பு பேட்டி:
* லட்டு படத்துக்கு பிறகு சம்பளத்தை ஒரு கோடி உயர்த்திட்டீங்களாமே?
ஒரு டையத்துல நான் பணம் கொடுத்து நடிச்சேன். இப்போ பாருங்க என்னைத் தேடி பணப்பெட்டியோட பின்னாடியே வர்றாங்க. காற்றுள்ள போதே தூத்திக்கணும் பிரதர். அதான் தைரியமா சம்பளம் கேட்குறேன். ஆனா நீங்க சொல்ற மாதிரி கோடியெல்லாம் கேக்கல. அது அடுத்த வருஷம்தான். வருஷத்துக்கு ஒரு கோடி உசத்துவேன் அவ்ளோதான். இப்போ ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்றேன்.
* எவ்வளவு?
அதை சொல்லிட்டா நாளைக்கே என் வீட்டுக்கு ஐ.டி காரங்க வந்துட மாட்டாங்களா? படத்துலதான் கோமாளி நிஜத்துல இல்ல.
* இப்படி அநியாயத்துக்கு சம்பளம் வாங்குறீங்களே அது உங்களுக்கே நியாயமா இருக்கா?
இந்த இடத்துக்கு நான் வர்றதுக்கு எத்தனை கோடியை இழந்திருக்கேன் தெரியுமா? பணத்தை தண்ணீரா இறைச்சிருக்கேன். அதையெல்லாம் திரும்ப எடுக்க வேணாமா?. இப்ப என்னோட ரவுண்டு அடிக்கிற வரைக்கும் அடிப்போம் கிடைக்கிற வரைக்கும் கிடைக்கட்டும்.
* சந்தானத்துக்கும் உங்களுக்கும் லடாய்ங்றாங்க நிஜம்மா?
சந்தானம் என் உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம். அவர் பாட்டுக்கு அவர் வேலைய பார்க்குறாரு, நான் பாட்டுக்கு என் வேலைய பார்க்குறேன். இந்த பேப்பர் காரங்கதான் எங்களுக்குள்ள சண்டை மூட்டப் பாக்குறாங்க.
* உங்களுக்கு எப்படி இப்படி திடீர்னு பாப்புலரிட்டி கிடைச்சுது?
திடீர்னு சொல்லாதீங்க. பல வருஷமா பிளான் போட்டு பல கோடிகளை செலவு செய்து எனக்கு ரசிகர்களை உண்டாக்கி இருக்கேன். ரசிகர்கள் சும்மா கிடைச்சிட மாட்டாங்க. அவுங்க நல்லது கெட்டதுக்கு உதவணும் அப்பதான் கிடைப்பாங்க. நான் உதவியிருக்கேன் எனக்கு 5 கோடி ரசிகருங்க கிடைச்சிருக்காங்க.
* பவர் ஸ்டார் பட்டத்தை வேறு யாரும் வச்சிக்கிட்டா என்ன பண்ணுவீங்க?
அதெப்படி வைக்க முடியும். தமிழ்நாட்டுல அதுக்கு பொருத்தமான ஆளு நான் மட்டுந்தான். எங்க தலைவர் திருமாவளவன் சூட்டின பட்டம் யாராவது பறிக்க நினைச்சா என்னோட ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா?
* ஹீரோவா எப்ப நடிக்க போறீங்க?
அடுத்த படம் ஹீரோதான். முன்னணி ஹீரோயின் எனக்கு ஜோடியா நடிக்கப் போறாங்க. இம்மீடியட்டா அறிவிப்பு வரும். நிறைய பேருக்கு ஷாக் அடிக்கப்போவுது.
* லட்சுமிராயோடு உங்களுக்கு என்ன சண்டை?
சண்டைல்லாம் ஒண்ணில்ல. ஒரு படத்துல என்னோட ஜோடியாக நடிக்க மாட்டேன்னு சொன்னாங்க. எழுதி வச்சுக்குங்க இந்த வருஷத்துக்குள்ள அந்த பொண்ணு எனக்கு ஜோடியா நடிக்கும்.
* ஆனந்த தொல்லை எப்போ ரிலீஸ்?
படம் முடிஞ்சு ரெடியா இருக்கு. கோச்சடையான் என்னிக்கு ரிலீசாகுதோ அன்னிக்கு ஆனந்த தொல்லையும் ரிலீசாகும்?
* ரஜினிய பார்த்துதான் நடிக்க வந்தேன்னு சொல்றீங்க? அவருக்கு போட்டியா படம் வெளியீடுவேன்ங்றீங்க? புரியலையே?
என்னோட ரோல் மாடல், போட்டி ரெண்டுமே அவர்தான். முயல்கூட மோதி ஜெயிக்றத விட யானையோட மோதி தோக்குறதுதான் சிறந்த வீரம்னு வள்ளுவர் சொல்லியிருக்கார் இப்போ புரியுதா?
* அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில நீங்க இருக்கீங்கதானே?
அய்யய்யோ அந்த அளவுக்கு நான் இன்னும் வளரல? தம்பிகள் சிம்பு, அஜீத், ஆர்யா. சூர்யான்னு நிறைய பேரு இருக்காங்க. நான் இன்னும் வளரணும்.
* பாலா படத்துல நடிக்காதது ஏன்?
அவரை தாக்கி ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். உடனே என்னை கூப்பிட்டு அனுப்பினார். சரி ஏதோ வில்லங்கம் பண்ணப்போறார்னு போனேன், என் படத்துல நடிக்கிறீங்களான்னு கேட்டாரு, சரின்னு போனேன். படப்பிடிப்புக்கு தேனிக்கு போனா மீசை எடுக்க சொன்னார், எடுத்தேன். சில பேப்பர்களை நீட்டி கையெழுத்து போடச் சொன்னார். ஆகா இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு உஷாராகி கும்பிட்டுட்டு வந்துட்டேன்.
* ஐ படத்தில் என்ன கேரக்டர்.
அதுல காமெடியா நடிச்சிருக்கேன்னு மட்டும் எழுதிக்குங்க, வேற ஏதாவது சொன்னா ஷங்கர் சார் டின் கட்டிடுவாரு.