பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே... வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... என்ற தன்னம்பிக்கை வரிகள் மூலம் நம் நெஞ்சுக்கு உரமூட்டியவர் பாடலாசிரியர் பா.விஜய். அந்த வரிகளுக்கு 2005ல் "தேசிய விருது கிடைத்ததோடு, பாடத் திட்டத்தில் சேர்த்து மகுடம் சூட்டியது, மதுரை காமராஜ் பல்கலை. எண்ண ஓட்டங்களுக்கு எழுத்து வடிவம் தந்த விஜய்க்கு, கவிஞர், நடிகர் என, பன்முகம். சொந்த ஊர் கும்பகோணம்; பிறந்தது கோவை; வசிப்பது சென்னை. மதுரையில் அவரோடு சில நிமிடங்கள்...
* "பன்முகம் சாத்தியமானது எப்படி?
1996 முதல் எழுத்து என்னுடன் பயணிக்கிறது. சரியான, திறமையான வியூகம் அமைத்தால், "பன்முகம் சாத்தியம்.
* அனைத்திற்கும் நேரம் போதுமானதாக உள்ளதா?
நேரம் ஒதுக்குவதில் பிரச்னை இல்லை. "புலிகளின் புதல்வன் எனும் தொடர் எழுதி வருகிறேன்; 2ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரையிலான சோழர்களின் வரலாறு அது. இதற்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் நேரம் ஒதுக்குகிறேன்.
* "இளைஞன் படத்திற்கு பின் வாய்ப்பு வரவில்லையோ?
120 கதைகளை கேட்டு, அதில் இரண்டை தேர்வு செய்துள்ளேன்; திரை வசனம் முடிந்துவிட்டது. காதல் கலந்த அந்த "திரில் படத்தில், எனக்கு இரண்டு நாயகிகள். யதார்த்தத்தை சித்தரிக்கும் அக்கதைக்கு, ஓராண்டாக நீச்சல், யோகா என என்னை தயார் படுத்தினேன். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவக்கம்.
* வாய்ப்புகள் பாதிக்க, தி.மு.க., ஆதரவு காரணமா?
எனக்கும், கருணாநிதிக்கும் இருப்பது இலக்கியம் தொடர்பான நட்பு மட்டுமே. "வித்தகக்கவிஞர் என கருணாநிதி பட்டம் சூட்டினார்; அதை சிலர் விமர்சித்தனர். "நீ என்ன சாதித்தாய்? எனக் கடிதம் எழுதினர்; நான் பொருட்படுத்தவில்லை.
* உங்களை கவர்ந்த பாடலாசிரியர்?
கண்ணதாசனின் இலக்கியம், வாலியின் காதல் வரிகளில் மூழ்கியவன் நான்; அவர்கள் தான் என் ஆசான்கள்.
* உங்களை வாரிசாக அறிவித்த வாலி பற்றி...?
85 வயதிலும் இளைமை வரிகளை உதிர்த்து வரும் கவிஞர் வாலி, என்னை கலையுலகின் வாரிசாக அறிவித்தது, நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.
* விஸ்வரூபம் தடைபடுகிறதே?
கலையுலகின் பொக்கிஷம் கமல்; அவரின் அனுபவத்தை சந்தேகப்படுவதை விட, உற்சாகப்படுத்த வேண்டும்.
* நடிகனின் அடுத்த பரிணாமம் அரசியலாமே?
நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும். கிளின்டன் பார்க்க விரும்பிய, சென்னை தன்னார்வலர் "பாலம் கல்யாண சுந்தரம் போன்றோரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் "செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.
* "ரோல்மாடல் ஆக யாரை பின்பற்றுகிறீர்கள்?
"உழைப்பு, விடாமுயற்சி,க்கு, என் தந்தை பாலகிருஷ்ணன் தான் "ரோல் மாடல்.
* "இளைஞன், காதல், எதிர்பார்ப்பு- அழகாய் சொல்லுங்களேன்!
குடியரசு நாடு என்பது, "குடிநாடாய் மாறும் அளவிற்கு, "டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள்.
ஜாதி திணிக்கப்படாத காதல் ஆரோக்கியமானது.
துப்பாக்கி படத்திற்கு எழுதிய "விடை கொடு மனமே பாடல், ராணுவ குடும்பத்திற்கும் கவுரவம் தரும் வகையில் அமைந்தது; அதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் கிடைக்கும் என நம்புகிறேன், என்றார்.
நீ சென்றுவிட்டால் நாடு எதையும் இளந்துவிடாது. நீ நாட்டுக்கு செய்தது என்ன. இந்த நாடுதான் உனக்கு நிறைய செய்துள்ளது. ஒருவேளை உணவிட்டவர்க்கே நன்றிகாட்டும் மனிதர்கள் நாம். தயவு செய்து இனிமேல் நாட்டைவிட்டு செல்வேன் என்பவர்கள் யாராக இருந்தாலும் சென்றுவிடுங்கள். நீங்கள் இல்லாவிடில் அந்த இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதுமே காத்திருப்பார். புதிய சிந்தனைகளும் பிறக்கும்