ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹெலிகாப்டர் சகிதமாய் சண்டையிடும் அளவிற்கு, தமிழ் சினிமா வளர்ச்சி கண்டாலும், மதுரையின் மண் மனம் சார்ந்த கதைகள், என்றுமே சோடை போனதில்லை. தமிழகத்தில் மட்டுமின்றி, உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும், மதுரையை மையமாக வைத்த கதைகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. கதைகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மட்டுமே மதுரையை பயன்படுத்தி வந்த கோடம்பாக்கம், தற்போது சினிமாவின் முக்கிய நிகழ்வுகளை, மதுரையில் அரங்கேற்றி வருகிறது. இத்தனைக்கும், சம்மந்தப்பட்ட படங்கள் அனைத்துமே, மெகா ஸ்டார்களை உள்ளடக்கியது, என்பது தான், "ஹைலைட். "பிரமாண்டமான இசை வெளியீட்டின் மூலம், வெளிவரவிருக்கும் படத்தின் எதிர்பார்பை அதிகரிக்க முடியும், என்ற எண்ணம், தயாரிப்பாளருக்கு இருப்பதால் தான்; லண்டன், மலேசியா, சென்னையின் ஸ்டார் ஓட்டல்களில் "ஆடியோ வெளியீடு நடக்கிறது. தற்போதைய அந்த நடைமுறை, மதுரை பக்கம் திரும்பி இருக்கிறது. "சினிமாவை ரசிப்பதிலும், தீர்மானிப்பதிலும், மதுரைக்காரன் தான் தேர்ச்சி பெற்றவன், என்பது, "பாக்ஸ் ஆபீஸ் விதிகளில் எழுதப்படாத சட்டம். அதனால் தான், மதுரையில் சினிமாவை பிரபலப்படுத்த தயாராகிவிட்டது, கோடம்பாக்கம்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், "வெப்சைட் மூலம் தான் பெரும்பாலானோர், பாடல்களை "டவுன் லோடு செய்கின்றனர். மதுரையில் தான், அன்றும், இன்றும், பணம் கொடுத்து ஆடியோ "சிடிகள் வாங்குவோர் அதிகம். மதுரைக்காரர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாமல் இல்லை; விலை கொடுத்து வாங்கும் "சிடியில் "குவாலிட்டி இருக்கும் என்பது, நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கோடம்பாக்கம், மதுரைக்கு திசை மாற, இதுவும் ஒரு காரணம்.
மதுரையை மையமாக கொண்ட படம் என்பதால், விருமாண்டியின் ஆடியோ வெளியீடு இங்கு நடந்தது. அதன் பின், விஜய் நடித்த வேலாயுதம், சட்டம் ஒரு இருட்டறை, கமல் நடித்த விஸ்வரூபம், பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடி வீரனும், என, ரசிகர்களின் உச்ச எதிர்பார்ப்பு கொண்ட படங்களின் ஆடியோ வெளியீடுகள், மதுரையில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பிரம்மாண்டம் என்னவென்றால், சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதை போலவே, மதுரையிலும் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு நடக்கிறது. விழாவை காண சென்னையை விட, இருமடங்கு கூடும் ரசிகர் கூட்டம், கோடம்பாக்கத்தை திகைக்க வைத்துள்ளது. "மதுரைக்கு வந்தால், "ஹிட் ராசியும், ரசிகர்களின் ஏகோபித்த "ஆசியும் இருப்பதால், கோடம்பாக்கம், மதுரை நோக்கி வருவதில் ஆச்சரியமில்லை.