Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்

09 மார், 2018 - 00:36 IST
எழுத்தின் அளவு:
Definitely-come-to-politics!-Varalakshmi-Sarath-Kumar

விஜய்யின், 62வது படம், ஜெய்யுடன் நீயா - 2, சக்தி உட்பட 10 படங்களில் பிசியாக நடித்து வரும், வரலட்சுமி, சமீபத்தில், தன் பிறந்தநாளுடன், சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாடினார்; அவருடன் பேசியதிலிருந்து:

நீங்கள் துவக்கிய, சேவ் சக்தி அமைப்பு செயல்பாடு எப்படி இருக்கிறது?
நன்றாக போகிறது. நாங்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மகளிருக்கான நீதிமன்றத்தை உடனடியாக கட்ட முடியாது என்றும், ஆனால், அனைத்து மாவட்டங்களிலும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அரசு தெரிவித்துள்ளது.

திடீரென நலத்திட்ட விழா எதற்கு... அரசியல் ஆர்வம் வந்து விட்டதா?
அரசியல் என்ற வார்த்தை, கெட்ட வார்த்தையா? யாரையும் தோற்கடிக்க அரசியலுக்கு வர வேண்டாம். நடிகர்கள் மட்டுமல்ல; சமுதாயத்திற்கு நல்லது செய்வோர் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சினிமாவில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சினிமாவில் கிடைத்த பிரபலம் என்ற பலத்தை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துவது தப்பில்லை. இப்போதைக்கு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது.

அரசியலில் உங்கள் திட்டம் என்ன?
பெண்களுக்கான நல்ல விஷயங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து?
அவர்கள் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஊரில் உள்ள அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.

விஷால் அரசியல் பிரவேசம் குறித்து?
அவரது அரசியல் பிரவேசம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நலத்திட்ட உதவிக்கு, வட சென்னையை தேர்ந்தெடுத்தது ஏன்?
வட சென்னையை தேர்ந்தெடுத்தது ஏனென்றால், இங்கு மற்ற பகுதியை விட, பிரச்னைகள் அதிகம் உள்ளன. இங்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த பகுதியில் விழா நடத்தினேன்.

பள்ளி கல்வியில் எந்த மாதிரியான மாற்றத்தை விரும்புகிறீர்கள்?
பள்ளி கல்வியில் தற்காப்பு கலை, பாலியல் குறித்த விழிப்புணர்வு பாடங்கள் தேவை.

தற்போது நீங்கள் நடிக்கும் படங்கள்?
விஜயுடன் ஒரு படம், ஜெய்யுடன் நீயா - 2, சண்டக்கோழி - 2, சக்தி என, ஒன்பது படங்களில் நடிக்கிறேன். எல்லாமே நல்ல கதையம்சம் உள்ள படங்கள். என் கேரக்டருக்கும், இந்த படங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

Advertisement
சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகாசினிமாவில் தினமும் கற்று கொண்டு ... அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை தர முடியாது : பி.ஆர்.விஜயலட்சுமி அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை ...


வாசகர் கருத்து (7)

Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
28 மார், 2018 - 09:22 Report Abuse
Ramanathan Balakrishnan நீங்கள் அரசியலுக்கு வந்தால் சரத்குமார் கட்சியில் சேராதீர்கள்.எதிர்காலமில்லா கட்சி அது
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09 மார், 2018 - 13:12 Report Abuse
Bhaskaran அப்பாடா தீபா அம்மாவுக்கு போட்டியில்லயே என்று நினைத்தேன் தங்கள் அவருக்கு சரியான போட்டியாளராகி தமிழ் நாட்டில் பெண் முதலமைச்சராகவரலாம்
Rate this:
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
09 மார், 2018 - 12:30 Report Abuse
Rajendran Selvaraj எம்மா இருக்கிற சினிமாக்காரங்கிய பத்தாத ( உங்க அப்பாவையும் சேர்த்துதான்)?
Rate this:
Naduvar - Toronto,கனடா
09 மார், 2018 - 03:37 Report Abuse
Naduvar வா வா அரசியல் பரவால்ல ...எத்தனாவது படிச்சிருக்க ...என்னைக்காவது கஷ்டப்பட்டு சம்பருச்சு பாத்துருக்கய்யா ?
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
09 மார், 2018 - 02:42 Report Abuse
Shanu வாழ்த்துக்கள்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film VadaChennai
  • வடசென்னை
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in