காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்தார்கள். பிரேம்குமார் இயக்கி இருந்தார். பள்ளியில் படிக்கும்போது காதலித்து பிரிந்தவர்கள், பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவான படம். பலரது மலரும் நினைவுகளை கிளப்பி விட்டதால் படமும் நன்றாக ஓடியது.
இப்போது அதே பாணியில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்கள். ஏ.ஜி.மகேஷ் இசை அமைக்கிறார், தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் சார்பில் ஆனந்தன், க்ளோஸ்டார் கிரியேஷன் சார்பில் தர்மராஜன் இணைந்து தயாரிக்கிறார்கள். முன்னாள் காதலர்கள் சந்திக்கும்போது வரும் பிரச்சினைகள் தான் படம். அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது : காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60 களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80களில் ஜாதி தடையாக இருந்தது. 2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம்.
இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. என்றார்.