ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த 2.0 படத்தின் சிங்கிள் டிராக் வீடியோ யுடியூபில் டிரெண்டிங்கில் இருந்தது. அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, 2.0 படத்தின் சிங்கிள் டிராக் வீடியோவை பின்னுக்குத்தள்ளினர்.
பொங்கல் அன்று ரஜினியின் பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளன. இதன் காரணமாக இரண்டு படங்களுக்கு இடையில் கடுமையான வியாபாரப் போட்டியும் நடைபெறவுள்ளது.
அஜித் நடிக்கும் படத்தின் முதல் நாள் வசூல் ஓரளவுக்கு அதிகமாகத்தான் இருக்கும். தற்போது அஜித் படத்துடன் ரஜினி படம் வெளியாவதால், இந்தமுறை வசூல் கடுமையாக குறைய வாய்ப்பிருக்கிறது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் டிசம்பர் 2ம் தேதி டிரைலரையும், டிசம்பர் 6ம் தேதி சிங்கிள் டிராக்கையும் வெளியிட உள்ளனர். டிசம்பர் 2ம் தேதி விஸ்வாசம் டிரைலர் வெளியானால் அடுத்தநாள், டிசம்பர் 3ம் தேதி பேட்ட படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட பேட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விஸ்வாசம் டிரைலரை டிரெண்டிங்கில் பின்னுக்குத்தள்ள திட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 6ம் தேதி விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி டிரெண்டிங்கில் வந்தால், டிசம்பர் 7ம் தேதி மற்றொரு பாடலை இணையத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.