ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்கள் பிரபலமாவதற்கு காரணமே அந்தப் படங்களில் இடம்பெறும் சூப்பர் ஹீரோக்கள்தான். ஸ்பைடர் மேன், அயர்ன்மேன், எக்ஸ்மேன், அவன்ஞ்சர்ஸ், ஹல்க், தோர் ஆகிய சூப்பர் மேன்களை கொண்ட படங்கள் பல பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூப்பர் ஹீரோக்களை தனது காமிக்ஸ் கதைகளில் உருவாக்கிய எழுத்தாளர் தான் ஸ்டான் லீ. அவரது காமிக்ஸ் கேரக்டர்கள் தான் படங்களில் சூப்பர் ஹீரோவாகின. ஸ்டான் லீ, மார்வெல் காமிக்ஸ் பதிப்பகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். சூப்பர் ஹீரோக்கள் படத்தில் நடித்தும் இருக்கிறார். நியூயார்க்கில் உள்ள மன்ஹாட் நகரில் பிறந்த ஸ்டான் லீ, 17 வயதிலேயே சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கத் தொடங்கி விட்டார். அமெரிக்க அரசின் மிக உயரிய விருதான நேஷனல் மெடல் ஆப் ஆர்ட்ஸ் விருதை பெற்ற ஒரு சிலரில் ஸ்டான் லீயும் ஒருவர்.
95 வயதான ஸ்டான் லீ கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்ப்பட்டார். அவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள நம்பர் ஒன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் காலமானார். அவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சூப்பர் மேன்களின் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலியை செலுத்தினர்.