ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனியார் வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்து பின்னர் காமெடி நடிகராக உருவெடுத்து பல படங்களில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்க அரசியல் நையாண்டி படமாக உருவாகும் படம் 'LKG'.
ஆர்.ஜே.பாலாஜியே இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுத அறிமுக இயக்குனர் பிரபு இயக்கி வருகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை 'வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 'LKG' படத்தின் முக்கிய விஷயம் ஒன்று வெளியாக இருக்கிறது'' என்று இந்த படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை தனது பாணியில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு என்பது 'LKG' படத்தின் மோஷன்போஸ்டரா அல்லது டீஸரா, டிரைலரா அல்லது சிங்கிள் டிராக்கா என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.