ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண் தயாரிக்கும் படம் தேவ். ரஜத் ரவிசங்கர் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்குடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக்கும், நிக்கி கல்ராணியும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். "படத்தில் கார்த்தியின் பெயர் தேவ். இதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன்" என்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர்.
அவர் மேலும் கூறியதாவது: ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை 'தேவ்' என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி. எனக்கும் கபில்தேவை பிடிக்கும் என்பதால் இந்த பெயரை ஹீரோவுக்கும், படத்திற்கும் வைத்துள்ளேன்.
கார்த்தியின் 'தேவ்' கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம்.
இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்றில்லாமல் கார்த்திக்கிற்கு இணையாக முக்கியத்துவம் இவருக்கு இருக்கும். பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். என்கிறார் ரஜத் ரவிசங்கர்.