ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சசிகுமாரின் அசுரவதம் படத்தில் அம்மா வேடத்தில் நடித்த அட்டகத்தி நந்திதா, தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் தேவி-2 படத்தில் சாரா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் தமன்னாவுடன் நடித்தபோது அவர் தன்னிடம் எந்தவித ஈகோவும் இல்லாமல் பழகியதாக சொல்லும் நந்திதா, தேவி-2 படம் மூலம் தமன்னா என்ற ஒரு நல்ல தோழி எனக்கு கிடைத்திருக்கிறார்.
இப்போதைய சினிமாவில் கொஞ்ச காலம் திரையில் காணவில்லை என்றால், காணாமல் போன நடிகை பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்பதில்லை. எந்தமாதிரியான வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் நடித்து சினிமாவில் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன் என்கிறார் நந்திதா.