ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. வெளியானதிலிருந்து தொடர்ந்து பல சாதனைகைளை அந்த டீசர் புரிந்து வருகிறது. அதே சமயம் டீசரைக் கிண்டலடித்தும், விமர்சித்தும் பல்வேறு விதமான மீம்ஸ்கள் உடனுக்குடன் வர ஆரம்பித்தன. அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'சர்கார்' டீசர் தொடர்ந்து டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்தது. அதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்களும் 'விஸ்வாசம் சுனாமி சூன்' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்டிங்கில் வரவைத்தனர்.
'சர்கார்' டீசரின் பொதுவான கருத்தாக படம் தெறிக்கவிடும் ஆக்ஷன், அரசியல் அதிரடிப் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. படத்தில் முழு இளமையான தோற்றத்தில் விஜய்யைப் பார்க்க முடியாமல், அவரை வெள்ளை தாடியுடனும் உலவவிட்டிருப்பது விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், எதிர்பார்ப்புக்கும் மீறி டீசர் பரபரப்பாக இருக்கிறது. இந்த வருட தீபாவளி சர்கார் தீபாவளி தான் என விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.