ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க, தமிழ் சினிமாவில் பலத்த போட்டி நிலவுகிறது. இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் படமாக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரியதர்ஷினி உருவாக்கும் படத்திற்கு "The Iron lady" (தி அயர்ன் லேடி) என பெயரிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்டரில் சட்டசபை பின்னணியில் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் கொள்கை வசனமான "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்பது இடம் பெற்று இருக்கிறது. விரைவில் படத்தின் துவக்க விழா நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரியதர்ஷினியின் படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனனும், சசிகலாவாக வரலட்சுமியும் நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த தகவல்கள் எல்லாமே யூகங்களாக தான் இருக்கும்.