ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அண்மையில் வெளியான பல படங்கள் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனாலும் அரைடஜன் படங்கள் அவர் கைவசம் வைத்திருக்கிறார். அதில் ஒன்று... தேவி-2.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த முதல் படம் 'தேவி'. 2016-ல் வெளியான 'தேவி'யில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் இருவருக்கும் வெற்றிப் படமாக அமைந்தது.
தேவி படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் 'லக்ஷ்மி' படத்தில் மீண்டும் இணைந்தனர். சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏ.எல்.விஜய்யும், பிரபு தேவாவும் மூன்றாவது முறையாக 'தேவி' படத்தின் இரண்டாம் பாகமான தேவி-2 படத்தை உருவாக்குகிறார்கள்.
'தேவி -2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மொரீஷியஸில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது. பிரபுதேவாவுடன் கோவை சரளாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.