ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லைகா தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அக்டோபரில் இப்படத்தை திரைக்குக் கொண்டுவரும் முயற்சியாக போஸ்ட்புரடக்ஷ்ன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்துக்கு முன்னதாக தனுஷ் நடித்து வந்த மற்றொரு படமான பாலாஜி மோகன் இயக்கும் 'மாரி-2' படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது. 'மாரி-2' படத்தில் தனுஷுடன் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க, வித்யா பிரதீப், 'ரோபோ' சங்கர், விஜய் டிவி அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். அந்த பாடலில் தனுஷ் நடனம் ஆடியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி இது.
'மாரி-2' படத்தின் கடைசி காட்சியில் மாரி 3 படத்துக்கான லீட் உள்ளதாகவும், மாரி 3 படம் அடுத்த வருட இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் மாரி படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.