ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்சேதுபதி நடித்து வரும் 96 மற்றும் சீதக்காதி ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா. கேரளாவை சேர்ந்த இவர், கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற இசைக்குழுவை உருவாக்கியவர். அதுமட்டுமல்ல பிரபல மலையாள இசைக்கலைஞரான பீதாம்பரனின் மகனும் கூட.
மலையாளத்தில் துல்கர், பஹத் பாசில் படங்களுக்கு இசையமைத்துள்ள இவரை, தனது ஒரு பக்க கதை மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கும் சீதக்காதிக்கும் இவரையே இசையமைக்க சொல்லிவிட்டார்.
இந்த சமயத்தில் பாலாஜி தரணீதரனின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமாருடன் கோவிந்த் வஸந்தா நட்பானார். இதையடுத்து விஜய்சேதுபதி - த்ரிஷா நடிக்கும் 96 படம் மூலமான இயக்குனராக மாறிய பிரேம்குமார், தனது படத்திற்கும் கோவிந்த் வஸந்தாவையே இசையமைப்பாளாராக்கி விட்டார்.
சமீபத்தில் வெளியான அசுரவதம் படத்திற்கு இசையமைத்ததும் இந்த கோவிந்த் வஸந்தா தான். மலையாள திரையுலகில் கோவிந்த் மேனன் என்கிற பெயரில் இசையமைத்துவரும் இவர், தனது தாய் வசந்தகுமாரியின் பெயரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தமிழில் கோவிந்த் வஸந்தா என்கிற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவரை பற்றிய இன்னொரு முக்கிய செய்தி, சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய நான்கு நடிகைகளின் போட்டோக்களை ஒன்றிணைத்து தனது பேஸ்புக் கவர் போட்டோவாக வைத்துள்ளார்.