ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, தேவி, குலேபகாவலி படங்களுக்குப் பிறகு பிசியான நடிகராகி விட்டார். தற்போது லட்சுமி படத்தில் நடித்து முடித்திருப்பவர் அடுத்தப்படியாக பொன் மாணிக்கவேல் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோடிட்ட இங்களை நிரப்புக படத்தை அடுத்து உள்ளே வெளியே-2 படத்தை இயக்குவதாக கூறிவந்த பார்த்திபன், இப்போது பிரபுதேவாவை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தேவி படத்தில் நடித்த தமன்னா மீண்டும் இணைகிறார்.
இந்த படம் தான் உள்ளே வெளியே 2 படமா? இல்லை வேறு படமா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.