ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் "கடைக்குட்டி சிங்கம்".
கடைக்குட்டி சிங்கம் படத்தில் வயதான மூதாட்டி ஒருவர் விவசாயம் செய்த பொருட்களின் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.
இதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.