ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை பெயர் வைக்கப்படாமல், தளபதி 62 என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்தது. விஜய்க்கு நாளை(ஜூன் 22) பிறந்தநாள், இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படத்திற்கு சர்கார் என பெயரிட்டுள்ளனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பது படத்தின் தலைப்பிலேயே தெரிகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டடங்களின் இரவு மின்னொளியில் ஸ்டைலாக புகைப்பிடித்தபடி விஜய் தோன்றுகிறார். கூடவே காதில் சிறிய வளையமும் அணிந்திருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மனதில் கொண்டு இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என விஜய் அறிவித்துள்ளார். அதனால் படத்தின் தலைப்பையே விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட் என கருதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சர்கார் படம் தீபாவளி ரிலீஸாக வெளிவர இருக்கிறது.