ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாவின் தாரைத்தப்பட்டை படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானார் வரலட்சுமி. அதோடு கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் தனது திறமைக்கு சவால் விடக்கூடிய எந்த மாதிரியான வேடங்களிலும் நடிக்க தயாராகி விட்டார்.
அந்த வகையில், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் சண்டக்கோழி-2 படத்தில் அதிரடியான வில்லியாக கலக்கியிருக்கிறார் வரலட்சுமி. அதாவது ஏற்கனவே விஷால் நடித்த திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்தது போலவே இந்த படத்தில் வரலட் சுமி அதிரடி வில்லியாக உருவெடுத்திருக்கிறார்.
அதையடுத்து, தனுஷ் நடித்து வரும் மாரி-2 படத்தில் ஒரு கலெக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். அறம் படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்தார். அதையடுத்து இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அழுத்தமான கலெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62வது படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் வரலட்சுமி. அதாவது கொடி படத்தில் திரிஷா நடித்ததை விடவும் கொடூரமான வேடமாம்.
ஆக, ஒரே நேரத்தில் கதாநாயகி, கதையின் நாயகி, பாசிட்டிவ், நெகடீவ் கேரக்டர்கள் என மாறுபட்ட கெட்டப்புகளில் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.