ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்கும் பேய் படம் காட்டேரி. ஒரு வருடத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் வைபவ் ஹீரோ. ஹீரோயினாக நடிக்க முதலில் பேசப்பட்டவர் ஹன்சிகா. கதை பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன். ஹீரோவை மாற்றுங்கள் என்றார் அவர். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஹன்சிகாவையே மாற்றி விட்டார். அதன் பிறகு ஓவியா ஹீரோயின் என்பதுதான் முதல் அறிவிப்பு. ஆனால் தற்போது ஓவியாவுக்கு பதில் சோனம் பாஜ்வா நடிப்பதாக அறிவிப்பு இடையில் நடந்தது என்ன?
படத்துக்கு ஒவியா கமிட் ஆனபோது அவரது சம்பளம் 10 லட்சத்துக்கும் குறைவுதான். அதன் பிறகுதான் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திடீர் புகழ் அடைந்தார். அதனால் சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தினார். இதனால் ஓவியா படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டார். அதன்பிறகு கதையில் சில மாற்றங்களை செய்து வரலட்சுமி, ஆத்மிகா ஆகியோரும் படத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
"சம்பளம் ஒரு பிரச்சினை இல்லை ஓவியா மட்டுமே ஹீரோயின் என்று சொல்லிவிட்டு மேலும் இருவரை சேர்த்து ஓவியாவின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் அவர் படத்திலிருந்து விலகினார்" என்கிறது ஓவியா தரப்பு.