ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இந்தியப் படங்களுக்கு சீனா நாட்டில் சமீப காலமாக பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஆமீர்கான் நடித்த 'தங்கல்' படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. அடுத்து சில வாரங்களுக்கு முன் சல்மான் கான் நடித்த 'பஜ்ரங்கி பைஜான்' படம் வெளியாகி 200 கோடி வசூலைத் தாண்டியது.
கடந்த ஆண்டு கோடையில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அப்படம் சீனாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில அரசியல் சூழ்நிலைகளால் அப்போது படத்தை வெளியிட முடியவில்லை என்றார்கள்.
இப்போது சீனாவில் 'பாகுபலி 2' படத்திற்கு சென்சார் கிடைத்துவிட்டதாம். 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை வெளியிட்ட நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் வெளியிட உள்ளதாம். இது பற்றிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.