சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி வசூலைக் குவித்த படம் 'காஞ்சனா 2'. இப்படத்தில் டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பலர் நடித்தனர். ராகவா லாரன்ஸ் தற்போது அவரது இயக்கம் நடிப்பில் 'காஞ்சனா 3' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை விரைவில் முடித்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
'காஞ்சனா 3' படத்தின் வேலைகள் முடிந்ததும் 'காஞ்சனா 2' படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். அவர் தற்போது தமிழில் '2.0' படத்தில் நடித்து முடித்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது. ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள 'பேட் மேன்' பிப்ரவரி 9 வெளியாகிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் அக்ஷய் குமார் பேசும் போது, “ஹாரர் காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'பூல் புலையா' மாதிரியான படங்களில் நடிக்க எனக்கு ஆசை. அம்மாதிரியான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” எனப் பேசியிருந்தார். அதனால், அக்ஷய்குமார், 'காஞ்சனா 2' ரீமேக்கில் நடிப்பது நடக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.