சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஸ்கெட்ச். இந்த படத்தையடுத்து சாமி ஸ்கொயர், துருவநட்சத்திரம் படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவரது மகன் துருவ், பாலா இயக்கும் வர்மா படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தின் ரீமேக்கில் இந்த படம் உருவாகிறது.
மேலும், இந்த படம் குறித்து விக்ரம் கூறும்போது, அர்ஜூன் ரெட்டி கதைக்கு என் மகன் துருவ் ரொம்ப கச்சிதமாக பொருந்துவார். அவரை அந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ஒரு தந்தையாக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதேசமயம் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் என் மகன் துருவ் நடிக்கவில்லையென்றால் நான் நடிப்பேன். வயது ஒரு பிரச்சினையே இல்லை. இப்போதும் என்னால் இளமையான காதல் கதைகளில் நடிக்க முடியும் என்கிறார் விக்ரம்.