ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நாகார்ஜூனா - கார்த்தி இணைந்து நடித்த படம் தோழா. இந்த படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் வெளியானது. வம்சி இயக்கத்தில் 2016ல் வெளியான அந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு ஓம் நமோ வெங்கடேசாய, ராஜூ ஹரி ஹாதி-2 ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த நாகார்ஜூனா, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் நானியும் நடிக்கிறார். அவர்களுடன் இன்னொரு முன்னணி தமிழ் நடிகரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தனுஷிடம் அந்த படத்தில் நடிக்க பேசியிருக்கிறார்கள்.