ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய்யின் 62வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இம்மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், பைரவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதோடு, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை மேற்கொள்ள இருக்கின்றனர். விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதுஒருபுறம் இருக்க, விஜய் 62 படத்திற்கான போட்டோ ஷூட் நடந்துள்ளது. ரோல்ஸ் ராய் கார் முன்பு, விஜய் ஸ்டைலாக இருக்கும் போட்டோ ஷூட் காட்சிகள் படமாக்கப்பட்டன. அவை சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன.