ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டப்பிங் வேலைகள் நிறைவடைந்துள்ளன. வரும் பொங்கலன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. ஆனால், அது பற்றி படக்குழுவினர் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
கடந்த மாதக் கடைசியில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துளளது. 90 லட்சம் பார்வைகளையும், 6 லட்சம் லைக்குகளையும் யு டியூபில் கடந்துள்ளது. அதே போல இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'கேங்' டீசருக்கு 20 லட்சம் மேற்பட்ட பார்வைகளும், 3 லட்சம் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கலந்த பரபரப்பான படமாக உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.