ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கௌதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையமைப்பில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கௌதம் மேனன் திடீரென நடத்துவார் அதன் பின் அப்படியே விட்டுவிடுவார். இப்படியே கடந்து, கடந்து போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டமாக நடந்து வருகிறது.
கௌதம் மேனன், விக்ரம் நடிக்க இயக்கி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டு, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் எப்போது முடிவடைந்து வெளிவரும் என்பது தெரியாமலேயே இருந்தது. சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதால் அவற்றை விரைவாக முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த 'விஐபி 2' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து வருகிறார். இப்படம் வெளிவந்ததும் 'வட சென்னை' படம் வெளியாக உள்ளது. அதன் பின்பு 'மாரி 2' படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.