ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யா ரசிகர்களுக்கு, தானா சேர்ந்த கூட்டம் பட, 'டீசர்' எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், 'டீசரில்' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் பச்சை சேலை உடுத்தி, கீர்த்தி சுரேஷ் மேடையில்
நிற்கிறார்.
மேலும், 'ஒருத்தன் பணக்காரனாக இருக்க, ஒரு கோடி பேரை பிச்சைக்காரன் ஆக்குறாங்க. மறைச்சி வைச்சிருக்க பணத்தை எடுத்தாலே, நம் நாட்டில் இருக்கிற பல பிரச்னைகளை களையலாம். தனியா நான் மட்டும் ஒண்ணும் செய்ய முடியாது; நம்ம எல்லாம் சேர்ந்தா நிச்சயமா ஏதாவது செய்யலாம்' என, சூர்யா பேசும் வசனம், படத்தின் மீதான
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.