ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி நடிக்கும் படம் நிமிர். மலையாளத்தில் வெளிவந்த மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக். இதனை பிரியதர்ஷன் இயக்குகிறார். மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிக்கிறார்.
இந்தப் படம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதையட்டி படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா உலக அளவில் சாதனை படைக்க துடிக்கும் மோட்டார் சைக்கிள் வீரருக்கு பல லட்சம் செலவில் ஸ்பான்சர் செய்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை சாதனையாளர் ஆக்கி சமுதாயத்தில் நிமிர்ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரேஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரேசர் ரஜினி கிருஷ்ணாவிற்கு போட்டிகளில் பங்கேற்க பொருளாதார பிரச்சினைகள் உள்ளதை அறிந்தேன். நிமிர் என்று படம் எடுத்தால் போதாது ஒரு சாதனை இளைஞனை நிமிரச் செய்ய வேண்டும் என்பதற்காக அவருக்க உதவ முடிவு செய்தேன். அவர் ரேஸிங் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். என்கிறார்.