ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'குயின்'. இப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கங்கனா ரனவத் நடித்த கதாபாத்திரத்தை தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ்வும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் ஏற்று நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக நான்கு மொழி நடிகைகளும் ஒரே சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு நால்வர் நடிக்கும் படங்களும் தனித் தனியாகப் படம் பிடிக்கப்படுகிறது. தமிழ், கன்னட மொழிகளை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
நான்கு நடிகைகளும் கைகளில் மெகந்தியுடன் இங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்கள். தமன்னா மற்றும் பருல் யாதவ் கைகளில் மெகந்தியுடன் புகைப்படங்களையும், காஜல் அகர்வால் கைகளில் மெகந்தியுடன் ஒரு கிளாமரான புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
நான்கு மொழிகளில் படமாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் வெளியிட உள்ளார்கள்.