ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜுலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டது. இதனால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து 153 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு கேளிக்கை வரியை 8 சதவீதம் விதித்ததைத் தொடர்ந்து 12 ரூபாய் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. அதனால், 153 ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தற்போது 165 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடந்த நான்கு மாதங்களாக திரைப்படங்களைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாக தெலுங்கு திரையுலகத்தினர் கருதுகின்றனர். அதனால், ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து நவம்பர் மாதம் அனைத்து படப்பிடிப்புகளையும், மற்ற பணிகளையும் நிறுத்துவதென முடிவெடுத்திருக்கிறார்களாம். இதற்கு தமிழ்த் திரையுலகத்தினரும் ஆதரவு தர உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த ஸ்டிரைக்கில் கன்னட, மலையாளத் திரையுலகமும் சேர்ந்து கொள்ள உள்ளதா என்பது விரைவில் தெரிய வரும். ஏற்கெனவே, தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தமிழ்நாடு அரசின் 8 சதவீத கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பிவிஆர், ஐனாக்ஸ் ஆகிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 'மெர்சல்' படம் இந்தத் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இந்தியா முழுவதும் இவர்கள் தியேட்டர்களை வைத்துள்ளதால் தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட கேளிக்கை வரி விதிப்பை ஏற்றுக் கொண்டால் மற்ற மாநிலங்களும் கேளிக்கை வரி விதிப்பை விதிக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இங்கு தியேட்டர்களை மூடியுள்ளார்கள்.