மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் - 'இந்தியன்'. மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு எழுத்தாளர் சுஜாதா, வசனம் எழுதியிருந்தார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
கமலுக்கு 1.5 சம்பளமும், ஷங்கருக்கு 2 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டது. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் படம், 30 கோடி ரூபாயை வசூலித்தது. 21 வருடங்களுக்குப் பிறகு கமல், ஷங்கர் கூட்டணி இணைகிறது. அதாவது, 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தத் தகவலை, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஃபைனலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்தப் படத்தை, ஏகப்பட்ட தெலுங்குப் படங்களைத் தயாரித்துள்ள பிரபல தெலுங்குப்படத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பதாக அறிவித்தனர். 'பிக் பாஸ்' மேடையிலும் அவரை அறிமுகப்படுத்தினர். இந்தப் படத்துக்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் இயக்கிய 'அந்நியன்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.
'இந்தியன் 2' அடுத்த வருடம் தொடங்கப்பட உள்ளநிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் அடிபடுகிறது. கமல்ஹாசனும், ஷங்கரும் தற்போது லைகா நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறார்களாம்.