Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஸ்பைடர்' விவகாரம், சம்ளத்தைத் திருப்பித் தருவாரா ஏ.ஆர்.முருகதாஸ் ?

21 அக், 2017 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Did-AR-Murugadoss-refund-for-Spyder-loss

'கத்தி' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஹிந்திப் படமான 'அகிரா', தமிழ், தெலுங்குப் படமான 'ஸ்பைடர்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அது மட்டுமல்லாமல் அவர் தயாரித்த '10 எண்றதுக்குள்ள, ரங்கூன்' ஆகிய படங்களும் தோல்வியடைந்தன. இதனிடையே, 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் நாயகனான மகேஷ் பாபு சுமார் 5 கோடி ரூபாய் வரையில் அவருடைய சம்பளத்திலிருந்து திருப்பித் தர சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். அதேப்போல, படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸும் அதே போல திருப்பித் தருவாரா என்று டோலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது. எப்போதோ ஒரு முறைதான் தெலுங்கில் படம் எடுக்க வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு சம்மதிப்பாரா என்றும் கேட்கிறார்கள். இருந்தாலும் சுமார் 120 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட ஒரு படத்தை கமர்ஷியல் ஆக உருவாக்காமல் தவறு செய்தவர் படத்தின் இயக்குனர்தானே என்றும் அவர்கள் கூறுகிறார்கள். படத்தின் நாயகனே சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் திருப்பித் தர சம்மதிக்கும் போது இயக்குனரும் சம்மதித்தால் அது தயாரிப்பாளருக்கு பேருதவியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து விஜய் படம் இயக்கப் போய்விடுவார். ஆனால், 'ஸ்பைடர்' தயாரிப்பாளர் அந்தத் தோல்வியிலிருந்து எப்போது மீளுவார் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தானே. ஒரு இயக்குனரை நம்பி அதிகமாக முதலீடு செய்யும் போது அதற்கு இயக்குனரும் கடமையுடன் இருந்தால் இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். விஜய் படத்தை இயக்கப் போவதற்கு முன் 'ஸ்பைடர்' தயாரிப்பாளருக்கு குறிப்பிட்டத் தொகையை முருகதாஸ் தரலாம் என்றே தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in