ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் படங்களுக்கு எப்போதுமே தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படம், சினிமா ஸ்டிரைக்கில் சிக்கிக்கொள்ளுமோ என்கிற நிலை உருவானபோது, கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்காரணமாக, அங்குள்ள விஜய் ரசிகர்கள் கட்அவுட், பேனர் என்று தயார் செய்து மெர்சல் கொண்டாட்டத்தை முன்பே தொடங்கி விட்டனர். ஆனால் இப்போது தீபாவளிக்கு எந்த தடையும் இன்றி மெர்சல் வெளியாகப்போகிறது. என்றாலும், இந்த முறை கேரளாவில் மெர்சல் படத்தை முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்க வைத்து விட வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் புதிய பப்ளிசிட்டிகளை தொடங்கியிருக்கிறார்களாம்.
குறிப்பாக, மெர்சல் விஜய்யின் பேனர்களை வைத்து அதற்கு முன்பு, விஜய்யின் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்களாம். அந்த நடனத்தை வீடியோ எடுத்து இணையதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள். ஆக, ஜிமிக்கி கம்மல் பாடல் நடனத்தைப்போன்று இப்போது கேரளத்து விஜய் ரசிகர்களின் மெர்சல் கொண்டாட்ட வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.