ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் களவு தொழிற்ச்சாலை. கதிர், வம்சி கிருஷ்ணா, குஷி, களஞ்சியம் நடித்திருந்தார்கள். டி.கிருஷ்ணஷாமி இயக்கி இருந்தார். ஷ்யாம் பென்ஞ்சமின் இசை அமைத்திருந்தார், வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வெங்கிஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்திருந்தார்.
இந்தப் படம் சிலை கடத்தல் தொடர்புடையது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் சிவன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் இருக்கும். அதனை கொள்ளையடிக்க வரும் வம்சி கிருஷ்ணா உள்ளூர் திருடன் கதிரையும் கூட்டு சேர்த்துக் கொள்வார். கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கத்தை போலீஸ் அதிகாரி களஞ்சியம் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
சிலை கடத்தல் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் படம் வெளிவந்திருப்பதால் மக்களிடம் ஒரளவிற்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் வேகத்தை கூட்டுவதற்கு இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் 15 நிமிட காட்சியை வெட்டியிருக்கிறார்கள். இதனால் வருகிற 29ந் தேதி முதல் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.