ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ஏம்.எம்.ரத்னம் தயாரிக்க, 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துள்ள படம் 'கருப்பன்'. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி வருகிற 29-ஆம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.
'கருப்பன்' படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் காதல் மற்றும் குடும்ப கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடித்துள்ளார். வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார்.
ஆயுதபூஜை ரிலீசாக ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்', நயன்தாராவின் 'அறம்' உட்பட நான்கைந்து படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த தேதியில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாவதாக பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஸ்பைடர் படம் வெளியாவதை தொடர்ந்து வேலைக்காரன் பின்வாங்கி டிசம்பருக்கு சென்றுவிட்டது.
விஜய்சேதுபதி நடித்த 'கருப்பன்' படமோ தைரியமாக ஸ்பைடர் படத்துடன் மோதுகிறது.