ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் இரண்டு பேருக்கும் இடையில் தொழில் ரீதியான மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அஜித் நடித்த விவேகம் படம் வெளியாகும் நேரத்தில் மெர்சல் படத்தின் இசைவெளியீடு நடப்பதும், மெர்சல் இசைவெளியீட்டு பரபரப்புக்கிடையில் விவேகம் படத்தின் டிரைலர் வெளியீடு எல்லாம் தற்செயல் அல்ல. மிக தெளிவாக திட்டமிட்டே ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற போட்டி நடப்பது கண்கூடாக தெரிகிறது.
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர், டிரைலர் யூடியூபில் சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்பட்ட அதே நேரத்தில், டுவிட்டரில் 'மெர்சல்' ஹேஷ்டேக் வார்த்தைக்கான 'எமோஜி' ஒன்றை அறிமுகப்படுத்தினர். 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் உருவம் அந்த எமோஜியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த 'எமோஜி' டெக்னாலஜியை டிவிட்டர் இந்தியாவுடன் இணைந்து இரண்டு படங்கள்தான் உருவாக்கியுள்ளன. சல்மான் கானின் 'டியூப்லைட்' படமும், ஷாருக் கானின் 'ஜப் ஹாரி மெட் சேகல்' படமும்தான் அவை. இந்திய அளவில் மூன்றாவது முறையாகவும், தென்னிந்திய அளவில் முதல்முறையாகவும் இந்த எமோஜி டெக்னாலஜியைப் பயன்படுத்திய படமாக 'மெர்சல்' இடம்பிடித்திருக்கிறது.
விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டநிலையில் இந்த எமோஜி டெக்னாலஜியை பயன்படுத்த முடியாமல்விட்டதை எண்ணி வருத்தத்தில் இருக்கிறதாம் விவேகம் படக்குழு மற்றும் அஜித்தின் ரசிகர்கள்.