ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகர்கள், தங்களது மொழியை தாண்டி பாலிவுட்டில் நடிப்பதே பெருமையாக பேசப்பட்ட காலம் இப்போது மாறிவிட்டது. பாலிவுட் திரையுலகம் தென்னிந்திய திரையுலகத்தை ஆச்சர்யமாக பார்க்கும் சூழல் தான் தற்போது நிலவுகிறது.
அதேசமயம் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வர ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில்தான் நடிகர் தனுஷ், கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார்..
தற்போது அவரை தொடர்ந்து கன்னட திரையுலகில் இருந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் சுதீப்பை தேடி வந்துள்ளது. எட்டி ஆர்யா என்கிற ஆஸ்திரேலிய இயக்குனர் டைரக்சனில் உருவாகும் 'ரைசன்' என்கிற சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் சுதீப். கன்னட நடிகர்களிலேயே ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் முதல் நபரும் சுதீப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.