சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கும்கி படத்தில் விக்ரம் பிரபு-லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன், அதையடுத்து தான் இயக்கிய கயல் படத்திலும் சந்திரன்-ஆனந்தியை அறிமுகம் செய்தார். பின்னர் தனுஷ்-கீர்த்தி சுரேஷை வைத்து தொடரி படத்தை இயக்கிய அவர், தற்போது கும்கி-2 படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார். இந்த படத்திலும் புதுமுகங்களையே நடிக்க வைக்கும் பிரபுசாலமன் புதுமுக தேர்வு நடைபெற்று வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அந்த படத்தில் நாயகியாக நடிக்க பட்டதாரி படத்தில் அறிமுகமான அதிதிமேனன் நடிப்பதாக தகவல் வௌியாகியிருக்கிறது. அதிதிமேனன், தற்போது ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கி வரும் சந்தனத்தேவன் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஆகஸ்டில் கும்கி-2 படப்பிடிப்பை தொடங்கயிருக்கும் பிரபுசாலமன், தொடர்ந்து புதுமுக நடிகர் தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்.